For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடி நாதத்தை கலங்க வைத்த கோலி 'த்ரோ' - தப்பித்த ஜோ 'ரூட்'-ன் ஆணி வேர்

குஜராத்: நான்காவது டெஸ்ட் போட்டியில், விராட் கோலியின் த்ரோவால் அரங்கேறிய சம்பவம் களத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. (இந்த மேட்டரை நீங்கள் படிக்கும் ஆட்டமே முடிந்திருக்க வாய்ப்பிருக்கு என்பது தனி மேட்டர்)

Virat kohli throw makes joe root cry in 2nd innings of england

இதில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 205 ரன்களும், இந்தியா 365 ரன்களும் எடுத்தன. இந்தியா 160 ரன்கள் முன்னிலைப் பெற, இங்கிலாந்து தற்போது இரண்டாம் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 66 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி பயணித்து வருகிறது.

இந்த இன்னிங்ஸில், 17.5வது ஓவரை அக்ஷர் படேல் வீச, பந்தை இங்கிலாந்து கேப்டன் ரூட் எதிர்கொண்டார். பந்தை பாயிண்ட் திசையில் அடித்து விட்டு, ரன் ஓட முயற்சித்த ரூட், உடனே முடிவை மாற்றிவிட்டு கிரீஸில் நின்றுவிட்டார்.

அப்போது, பாயிண்ட் திசையில் நின்றிருந்த கோலி, பந்தை ஸ்டெம்ப்புகளை நோக்கி கேஷுவலாக ஏறிய, பந்து விக்கெட் கீப்பர் பண்ட்டுக்கும் வராமல், ஸ்டெம்ப்புக்கும் வராமல், ரூட் நோக்கி சென்றது. அவரும் பந்தை பார்த்தபடியே நிற்க, கிரீஸ் உள்ளே பிட்ச் ஆன பந்து, எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆக, யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூட்டின் ஆணி வேரை தாக்கியது.

இதனால் ஒரு நொடி நிலைகுலைந்து போன ரூட், வலி தாங்கமுடியாமல் அப்படியே உட்கார்ந்துவிட்டார். பிறகு, எந்தவித இன்டென்ஷனும் இல்லாத கோலியின் அந்த த்ரோவை புரிந்து கொண்ட ரூட் சிரித்துக் கொண்டே கோலியிடம் கைக்கொடுக்க, நிலைமை சகஜமானது.

யப்பா.. என்னா அடி!

Story first published: Saturday, March 6, 2021, 15:30 [IST]
Other articles published on Mar 6, 2021
English summary
Virat kohli throw joe root - இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X