For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவங்க வம்பிழுக்காம இருக்குற வரை நல்லது.. ஆஸ்திரேலிய அணியை போகிற போக்கில் எச்சரித்த கோலி

Recommended Video

ஆஸ்திரேலிய அணியை போகிற போக்கில் எச்சரித்த கோலி- வீடியோ

நியூடெல்லி : இந்திய அணி நேற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்தியாவில் இருந்து கிளம்பியது.

பயணத்துக்கு முன்னர் பேட்டி அளித்த கோலி ஆஸ்திரேலிய அணி முன்பு போல வம்பிழுக்காமல் இருந்தால் சரி என கூறினார்.

நாங்கள் எந்த பிரச்சனையும் ஆரம்பிக்க மாட்டோம். ஆனால் அவர்கள் எதையும் தொடங்காமல் இருக்க வேண்டும் என கூறினார்.

கோலி பிரச்சனை பண்ணாம இருப்பாரா?

கோலி பிரச்சனை பண்ணாம இருப்பாரா?

கோலி இதற்கு முன் ஆஸ்திரேலியா சென்ற போது எல்லாம் பஞ்சாயத்தை கூட்டி விடுவார். ஒருமுறை ஆஸ்திரேலிய ரசிகர்களை பார்த்து மோசமான சைகை காட்டினார் என்ற பிரச்சனை எழுந்தது. அடுத்து ஸ்டீவ் ஸ்மித் உடன் மோதல் போக்கை கடைபிடித்தார் கோலி. இதனால், இயல்பாகவே கோலி ஆஸ்திரேலியாவில் சென்று கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளார் என்ற உடன் இந்த முறை என்ன பிரச்சனை வருமோ? என எண்ணத் தோன்றுகிறது. இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்ட போது கோலி பதில் அளித்தார்.

இப்போது நான் கேப்டன்

இப்போது நான் கேப்டன்

கோலி கூறுகையில், "நான் இளம் வயதில் முதிர்ச்சியற்ற சில விஷயங்களை செய்தேன். ஆனால், இப்போது கேப்டனாக அணி வீரர்களின் தேவையை தாண்டி யோசிக்க எனக்கு நேரமில்லை" என கூறினார்.

திருப்பி அடிக்கவும் தயங்க மாட்டோம்

திருப்பி அடிக்கவும் தயங்க மாட்டோம்

அதே சமயம் திருப்பி அடிக்கவும் தயங்க மாட்டோம் என கூறினார். "நாங்கள் எப்போதும் திருப்பி கொடுக்கும் பழக்கம் உடையவர்கள். அதுவாக ஆரம்பிக்காத வரை நல்லது. நாங்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டோம். ஆனால், வந்தால் திருப்பி கொடுப்போம்" என்றார் கோலி.

அணியின் செயல்பாடுகள்

அணியின் செயல்பாடுகள்

இதை தவிர்த்து இந்திய அணியின் செயல்பாடுகள் பற்றி பேசிய கோலி, இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடினால் போதும். பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்கள் வீழ்த்தும் திறன் பெற்று இருப்பதால் ஆட்டம் எளிதாக இருக்கும் என குறிப்பிட்டார்.

Story first published: Saturday, November 17, 2018, 14:16 [IST]
Other articles published on Nov 17, 2018
English summary
Virat Kohli told As long as sledging don’t start we are okay with it, before the team departs to australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X