For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலிக்கு லக்கே இல்லை.. 2 இன்னிங்சிலும் வினோத முறையில் அவுட்.. இம்முறையும் வாய்ப்பு போச்சு

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் விராட் கோலி வினோத முறையில் ஆட்டமிழந்ததால், அவருக்கு லக்கே இல்லை என்று ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விராட் கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளாக 71வது சதத்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், கோலி பழைய பார்ம்க்கு திரும்புவார் என்று ரசிகர்களும் பெரிதும் நம்பினர்.

இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?

கோலியின் ஃபார்ம்

கோலியின் ஃபார்ம்

அதற்கு காரணம், விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் பார்ம்க்கு திரும்பிய சமிக்கைகளை காட்டினார். லெஸ்டர்ஷிர் அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் பொறுமையாக விளையாடி 33 ரன்களை சேர்த்தார். இதே போன்று இரண்டாவது இன்னிங்சிலும் விராட் கோலி தனது டிரெட் மார்க் ஷாட்களை ஆடி 67 ரன்கள் சேர்த்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதனால் விராட் கோலி மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியது. ஆனால், விராட் கோலி 19 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த போது பாட்ஸ் வீசிய பந்தை லீவ் செய்ய முயன்ற போது பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைய, 2வது இன்னிங்சில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

4 பவுண்டரிகள்

4 பவுண்டரிகள்

இதனைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சில் விராட் கோலி அபாரமாக விளையாடினார். இதில் விராட் கோலி கவர் டிரைவ் ஆடி பவுண்டரி விளாச, ரசிகர்கள் இன்று 71வது சதம் நிச்சயம் என எதிர்பார்த்தார்கள். விராட் கோலி அடித்த 20 ரன்களில் இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். ஆனால் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச, விராட் கோலி வினோத முறையில் அவுட் ஆனார்.

வினோத அவுட்

வினோத அவுட்

பந்து ஃபுல் லெங்த்தில் பட்டு ஸ்விங் ஆக, அதனை விராட் கோலி டிரைவ் செய்யும் போது பந்து பவுன்ஸ் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. பந்து பவுன்ஸ் ஆனதால் விக்கெட் கீப்பர் அதனை பிடிக்க முயன்ற போது தவறவிட்டார். அப்போது அருகில் நின்ற ஜோ ரூட், அந்த பந்தை கீழே விழ விடாமல், கேட்ச் பிடிக்க விராட் கோலி மீண்டும் ஏமாற்றத்துடன் சென்றார்.

Story first published: Sunday, July 3, 2022, 23:23 [IST]
Other articles published on Jul 3, 2022
English summary
Virat kohli unlucky dismissal made fans disappointed விராட் கோலிக்கு லக்கே இல்லை.. 2 இன்னிங்சிலும் வினோத முறையில் அவுட்.. இம்முறையும் வாய்ப்பு போச்சு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X