குத்தாட்டம் போட்ட விராட் கோலி... வைரலான வீடியோ... ஆர்ச்சரின் பேட் கமெண்ட்

அபுதாபி : அபுதாபியில் நேற்றைய தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையில் ஐபிஎல்லின் 31வது லீக் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி தோல்வியுற்றது. இது ஆர்சிபி அணிக்காக விராட் கோலி ஆடிய 200வது போட்டியாகும்.

இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக பயிற்சியின்போது விராட் கோலி போட்ட குத்தாட்ட வீடியோ வைரலாகியுள்ளது. இதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர் ஜோப்ரா ஆர்ச்சர் போட்ட கமெண்ட்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

அபுதாபியில் நேற்றைய தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையில் ஐபிஎல்லின் 31வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் பேட்டிங் ஆர்டரில் ஆர்சிபி சில மாற்றங்களை செய்த நிலையில், ரன் குவிப்பு தடைபட்டது. இதையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரசிகர்கள் உற்சாகம்

இந்த போட்டியின்மூலம் ஆர்சிபி அணிக்காக தனது 200வது போட்டியை பூர்த்தி செய்துள்ளார் விராட் கோலி. போட்டியில் தோல்வியுற்ற போதிலும் முன்னதாக மைதானத்தில் விராட் கோலி போட்ட குத்தாட்டம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. தடுக்க முடியாத வகையில் அவர் போட்ட குத்தாட்டத்திற்கு ரசிகர்கள் பாலிவுட் படங்களின் பாடல்களை சேர்த்து கொண்டாடி வருகின்றனர்.

அள்ளிய லைக்குகள்

அள்ளிய லைக்குகள்

நேற்றிரவு பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு சில மணிநேரங்களிலேயே 26,000 லைக்குகளும் 4 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து மகிழ்ந்துள்ளனர். வீடியோவை வைத்து பல்வேறு மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் அதகளப்பட்டன. பல்வேறு கமெண்ட்டுகளும் பதியப்பட்டன.

இரட்டை அர்த்த கமெண்ட்

இந்நிலையில், இந்த வீடியோவிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர் ஜோப்ரா ஆர்ச்சரும் வேடிக்கையாக கமெண்ட் ஒன்றை செய்துள்ளார். ஆனால் இரட்டை அர்த்தத்தில் அந்த கமெண்ட் பதியப்பட்டுள்ளதால், அதற்கும் ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை செய்துள்ளனர். சமீபத்தில் சுனில் கவாஸ்கர், அனுஷ்கா சர்மாவை வைத்து செய்த கமெண்ட்டை இதனுடன் ஒப்பு நோக்கி பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Rajasthan Royals pacer Jofra Archer also joined the bandwagon of jokes
Story first published: Friday, October 16, 2020, 11:38 [IST]
Other articles published on Oct 16, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X