For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மார்க் மை வேர்ட்ஸ்.. கோஹ்லியால்தான் அந்த சாதனை தகர்க்கப்படும்: கட்டியம் கூறும் கபில்தேவ்

By Veera Kumar

டெல்லி: விராட் கோஹ்லியால்தான் அந்த ஒரு சாதனையை நிகழ்த்த முடியும் என்றும், இந்த வார்த்தையை குறித்து வைத்துக்கொள்ளும்படியும், முன்னாள் ஆல்-ரவுண்டர் கபில் தேவ் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து ஆடி வருகிறது. ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி இரட்டை சதம் விளாசினார்.

முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் தற்போது 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்களில் ஆல்-அவுட்டாக, இந்தியா முதல் இன்னிங்சில் 304 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

குறித்துக் கொள்ளுங்கள்

குறித்துக் கொள்ளுங்கள்

இந்நிலையில், இந்தியா டுடே டிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் 1983ம் ஆண்டு உலக கோப்பையின் ஹீரோ, கபில் தேவ் கூறியுள்ளது: மார்க் மை வேர்ட்ஸ்.. ஒரு டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி 400 ரன்களை கடப்பார். அப்போது நான்தான் இதை முதலில் சொன்னேன் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்.

சச்சின்தான் பெஸ்ட்

சச்சின்தான் பெஸ்ட்

சச்சின் டெண்டுல்கரை விட கோஹ்லி சிறந்த பேட்ஸ்மேன் என்று கூற முடியாது. ஆனால் சச்சினிடம் இல்லாத ஒரு விஷயம் கோஹ்லியிடம் இருப்பதால் இந்த சாதனையை அவரால் படைக்க முடியும். அதுதான் மன தைரியம்.

மனத்தடை

மனத்தடை

இளம் வயதில் கோஹ்லியைவிட சச்சின் மிகுந்த திறமையான பேட்ஸ்மேன்தான். ஆனால் போகப்போக, மனதளவில் அவருக்கு தடைக்கற்கள் உருவாகின. செஞ்சுரி அடித்த பிறகு ரன்களை மேலும், மேலும் குவிக்க வேண்டும், என்ற மன வேட்கை இல்லை.

லாரா சாதனை

லாரா சாதனை

கோஹ்லியிடம் மன வலிமை உள்ளது. எனவே 400 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடிக்க கூடியவராக கோஹ்லி வருவார். இவ்வாறு கபில் தேவ் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, August 2, 2016, 17:02 [IST]
Other articles published on Aug 2, 2016
English summary
Former India captian Kapil Dev has lauded India's Test skipper Virat Kohli and feels the 27-year-old batsman is capable of breaking Brian Lara's Test record of 400. 'Virat Kohli is the best batsman at the moment' Virat Kohli smashed his maiden double hundred in Test cricket against West Indies in Antigua, last week and became first Indian skipper to slam a double on foreign soil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X