அழகான பின்புலம்... காதலுடன் விராட் -அனுஷ்கா ஜோடி... ஏபிடீ கைவண்ணத்தில் புகைப்படம்

துபாய் : ஆதர்ச தம்பதி என்று பெயரெடுத்துள்ள விராட் கோலி -அனுஷ்கா சர்மா இருவரும் தங்களின் விதவிதமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

இம்முறை டிவிட்டர் பக்கத்தில் விராட் கோலி பதிவிட்டுள்ள புகைப்படம் அதன் அழகால் ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஆனால் இந்த ஆச்சர்யத்திற்கு சொந்தக்காரர் ஆர்சிபியின் நட்சத்திர வீரர் ஏபி டீ வில்லியர்ஸ். அழகான பின்புலத்தில் விராட் மற்றும் அனுஷ்காவை அவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

21 நொடி.. சூப்பர் ஓவருக்கு இடையே மைதானத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண்.. யார் இந்த மிஸ்ட்ரி கேர்ள்

சமூக வலைதளங்களில் பரபர

சமூக வலைதளங்களில் பரபர

இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் ஸ்டார் அனுஷ்கா சர்மா இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்புடன் காணப்படுகின்றனர். அவர்கள் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் பாராட்டுகளையும் லைக்குகளையும் அள்ளுகின்றது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

சமீபத்தில் அவர்கள் தங்களது குழந்தையின் வரவு குறித்த செய்தியை பகிர்ந்துள்ளனர். வரும் ஜனவரியில் இருவராக உள்ள தாங்கள் மூவராக உள்ளதாக அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். இதனால் அவர்கள் மட்டுமின்றி அவர்களது ரசிகர்களுக்கும் உற்சாகம் பற்றிக் கொண்டது.

அழகால் அள்ளிய புகைப்படம்

அழகால் அள்ளிய புகைப்படம்

இந்நிலையில், யூஏஇயில் உள்ள விராட் கோலி, தான் மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் உள்ள புகைப்படம் ஒன்றை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அழகான பின்புலத்தில், நதியில் இருவரும் நீராடும்வகையில் உள்ள அந்த புகைப்படம் அனைவரையும் அழகால் அள்ளுகிறது.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

இதில் ஒரு டிவிஸ்ட் என்னவென்றால், இந்த புகைப்படத்தை எடுத்தது ஆர்சிபியின் சக வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் என்பது தான். இதையடுத்து ரசிகர்கள் தங்களது பாராட்டு மழையால் வில்லியர்சை நனைய விட்டுள்ளனர். இன்னும் எத்தனை திறமைகளை அவர் தன்னுள் ஒளித்து வைத்துள்ளார் என்று கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Fans on Twitter were left in awe of De Villiers' many talents
Story first published: Monday, October 19, 2020, 14:22 [IST]
Other articles published on Oct 19, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X