For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி தான் பெஸ்ட்… விஸ்டன் சிறந்த வீரர்.. ஹாட்ரிக் அடித்து புதிய சாதனை

டெல்லி:2019ம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2016-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4-வது ஆண்டாக விராட் கோலி விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்று வருகிறார். 3 முறைக்கு மேல் விஸ்டன் விருதுகளை பெற்ற முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

இதுவரை 3 முறைக்கு மேல் விஸ்டன் விருதுகளை டான் பிராட்மேனும், ஜேக் ஹாப்சும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பின் கோலி தற்போது வென்றுள்ளார். கோலியோடு சேர்த்து மொத்த 5 சிறந்த வீரர்களை விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் சம்பளத்துக்கு சச்சின் தான் காரணம் தெரியுமா? மறைக்கப்பட்ட அந்த உண்மையை சொன்ன சேவாக் ஐபிஎல் சம்பளத்துக்கு சச்சின் தான் காரணம் தெரியுமா? மறைக்கப்பட்ட அந்த உண்மையை சொன்ன சேவாக்

பட்லர் கர்ரன்

பட்லர் கர்ரன்

அதில் விராட் கோலி தவிர்த்து, இங்கிலாந்து வீராங்கனை டாமே பியாமவுன்ட், இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ரோரி பர்ன்ஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனாவும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 போட்டியில் சிறந்த வீரராக தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோலியின் 11 சதங்கள்

கோலியின் 11 சதங்கள்

2018-ம் ஆண்டில் விராட் கோலி 2,735 ரன்களை டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 போட்டிகளில் சேர்த்துள்ளார். அதில் 11 சதங்களை விராட் கோலி அடித்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. ஆனால், கோலி, 5 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களுடன் 593 ரன்கள் குவித்தார்.

59 ரன்கள் சராசரி

59 ரன்கள் சராசரி

கோலி குறித்து விஸ்டன் ஆசிரியர் லாரன்ஸ் பூத் கூறுகையில், " 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு கோலி வந்திருந்த போது 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரின் சராசரி 13.40 ஆகும். ஆனால், கடந்த முறை அவர் 593 ரன்கள் சேர்த்து 59.30 ரன்கள் சராசரி வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 10, 2019, 18:15 [IST]
Other articles published on Apr 10, 2019
English summary
Virat Kohli named Wisden's 'Leading Cricketer' for third straight year.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X