For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“விராட் கோலி முதலில் ஈகோ மோதலை விடனும்”.. கபில் தேவ் கூறிய முக்கிய அட்வைஸ். ரசிகர்கள் வரவேற்பு!

மும்பை: விராட் கோலியிடம் ஈகோ மோதல் இருக்கக்கூடாது என முன்னாள் வீரர் கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதில் இருந்து கிரிக்கெட் உலகமே பரபரப்பாக இருந்து வருகிறது.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரின் தோல்விக்கு பின்னர் இந்த முடிவை அறிவித்திருப்பதால், பிசிசிஐ அழுத்தம் கொடுத்து விலக வைத்ததா என்று பல்வேறு கேள்விகள் உலா வருகின்றன.

பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம்

ஆனால் இதுகுறித்து விளக்கமளித்திருந்த பிசிசிஐ, விராட் கோலியே தான் தாமாக முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதனை அவர் தெளிவாக தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டது. டி20 மற்றும் ஒருநாள் அணி கேப்டன்சியில் இருந்து விலகியதில் இருந்து அவருக்கு டெஸ்டில் மட்டும் நெருக்கடி இருந்ததாக தெரிகிறது. இதனால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே இது நல்ல முடிவு தான் என முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

கபில் அட்வைஸ்

கபில் அட்வைஸ்

இந்நிலையில் விராட் கோலி ஈகோ இல்லாமல் இனி விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், டி20 கேப்டன்சியில் இருந்து விலகியதில் இருந்தே கோலிக்கு அழுத்தம் இருந்து வருகிறது. அவரின் செயல்பாடுகளில் நன்றாக தெரிந்தது. ஒருவேளை அவருக்கு கேப்டன்சி செய்யவே பிடிக்காமல் போயிருக்கலாம். நாம் அதனை மதிக்க வேண்டும். எனவே இனி எவ்வித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படலாம்.

ஈகோவை விடுங்கள்

ஈகோவை விடுங்கள்

விராட் கோலிக்கு அதிக பக்குவம் உள்ளது என நினைக்கிறேன். எனவே எந்தவித ஈகோ மோதலும் இல்லாமல் இளம் வீரர்களுக்கு கீழ் விளையாட வேண்டும். என்னுடைய சீனியர் சுனில் கவாஸ்கர் எனக்கு கீழ் விளையாடியுள்ளார். நான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அசாரூதினுக்கு கீழ் ஆடியுள்ளேன். எனவே ஈகோவை விடுத்து விளையாடினால் புதிய கேப்டனுக்கும் இந்திய அணிக்கும் நல்லது. வரவிருக்கும் புதிய கேப்டனுக்கு விராட் கோலி பக்கபலமாய் இருக்க வேண்டும்.

Recommended Video

Dhoniக்கு நன்றி சொன்ன Kohli! Captaincy Resign Statementல் குறிப்பிட்டார் | OneIndia Tamil
கேப்டன்சி ரெக்கார்ட்

கேப்டன்சி ரெக்கார்ட்

33 வயதாகும் விராட் கோலி, இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்துள்ளார். இதுவரை 68 டெஸ்ட் களில் வழிநடத்தி 40 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தார். இதே போல டெஸ்ட் புள்ளிப்பட்டியலிலும் இந்தியாவை உச்சிற்கு கொண்டு சென்றவர். அவரின் கேப்டன்சி ஆற்றல்களை அடுத்து வரும் கேப்டனும் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, January 17, 2022, 12:29 [IST]
Other articles published on Jan 17, 2022
English summary
'Virat will have to give up his ego' Kapil dev gives a key advices to Virat kohli, after he quit his test captaincy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X