For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பை: 30 பேர் கொண்ட அணியில் ஷேவாக், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை!

மும்பை: 2015ம் ஆண்டு உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் எதிர்பார்த்தது போல ஷேவாக், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், யுவராஜ் சிங், கெளதம் கம்பீர் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதனால் இவர்களது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடிவுக்கு வருகிறது.

என்ன கொடுமை என்றால் இவர்களில் பலரும் கடந்த 2011 உலகக் கோப்பையில் ஹீரோவாக தலைசிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள் ஆவர். அதாவது யுவராஜ் சிங், ஜாகீர் கான் ஆகியோர் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் அசத்தியவர்கள். அதிலும் யுவராஜ் சிங்கின் பிரமாதமான ஆல் ரவுண்ட் ஆட்டம்தான் நமக்கு உலகக் கோப்பைக் கிடைக்க முக்கியக் காரணமும் கூட. ஆனால் இன்று இருவரும் ஜீரோவாகி விட்டனர்.

Virender Sehwag, Harbhajan, Yuvraj Singh, Gautam Gambhir Ignored for World Cup 2015

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறப் போகும் 30 பேர் கொண்ட உத்தேச அணியை இன்று தேர்வாளர்கள் அறிவித்தனர். ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் கூடி ஆலோசித்து இந்த அணியை அறிவித்துள்ளது.

இதில் டோணி, இஷாந்த் சர்மா, வருண் ஆரோன், முகம்மது ஷமி, புவனேஸ் குமார், ஷிகர் தவன், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அதேசமயம், முக்கியவீர்ரகள் பலரின் பெயர் இடம் பெறவில்லை. அதில் முக்கியமானவர்கள் ஷேவாக், கம்பீர், ஹர்பஜன், ஜாகீர், யுவராஜ் ஆகியோர்.

இந்த அணியிலிருந்து அடுத்து 15 பேர் கொண்ட இறுதி அணி ஜனவரி 7ம் தேதி தேர்வு செய்யப்படும். உலகக் கோப்பைப் போட்டி பிப்ரவரி 14ம் தேதி தொடங்குகிறது.

ஷேவாக் சமீப காலமாக உள்ளூர் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவர் சற்று சிறப்பாக ஆடினார். அதேசமயம் மற்ற போட்டிகளில்அவர் சரிவர ஆடவில்லை.கடைசியாக அவர் 2013ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆடியிருந்தார்.

Virender Sehwag, Harbhajan, Yuvraj Singh, Gautam Gambhir Ignored for World Cup 2015

ஹர்பஜன் சிங் நிலைமை படு மோசம். அவர் சரிவர ஆடவில்லை. கடைசியாக அவர் ஒரு நாள் போட்டியில் 2011ம் ஆண்டுதான் ஆடியிருந்தார். 2013ல் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தா்.

யுவராஜ் சிங் பரவாயில்லை என்று கூறும் அளவில்தான் இருந்தார். கடைசியாக அவர் ஆடியது 2013ல் தான்.

கம்பீர், உள்ளூர் போட்டிகளில் சுமாராக ஆடி வந்தார். ஐபிஎல் போட்டிகளை கணக்கில் சேர்க்கவில்லை தேர்வாளர்கள்.

30 பேர் அணி விவரம்:

டோணி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஜிங்கியா ரஹானே, ராபின் உத்தப்பா, விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அம்பட்டி ராயுடு, கேதார் ஜாதவ், மனோஜ் திவாரி, மனீஷ் பான்டே, விருத்திமான் சஹா, சஞ்சு சாம்சன், ஆர்.அஸ்வின், பர்வேஸ் ரசூல், கரன் சர்மா, அமீத் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், இஷாந்த் சர்மா, புவனேஸ் குமார், முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், தவல் குல்கர்னி, ஸ்டூவர்ட் பின்னி, மொஹித் சர்மா, அசோக் திண்டா, குல்தீப் யாதவ், முரளி விஜய்.

Story first published: Friday, December 5, 2014, 12:45 [IST]
Other articles published on Dec 5, 2014
English summary
Virender Sehwag, Harbhajan, Yuvraj Singh, Gautam Gambhir have been Ignored for World Cup 2015, according to the 30 member Indian team probables..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X