For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா ஜெயிக்கணும்-னா.. "அந்த" ரெண்டு பேர் கட்டாயம் - சேவாக்கின் வெற்றி "மந்திரம்"

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில், இந்திய அணி வெற்றிப் பெறுவதற்கான மந்திரத்தை வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

தலையைத் தாக்கிய பவுன்ஸ்.. தடுமாறி விழுந்த ரஸல்.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ஆம்புலன்ஸ்.. என்னாச்சு?தலையைத் தாக்கிய பவுன்ஸ்.. தடுமாறி விழுந்த ரஸல்.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ஆம்புலன்ஸ்.. என்னாச்சு?

இதற்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக, 'இன்ட்ரா - ஸ்குவாட்' எனப்படும் தங்களுக்குள்ளேயே இரு அணிகளாக பிரிந்து விளையாடும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.

அஷ்வின், ஜடேஜா

அஷ்வின், ஜடேஜா

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ரவிச்சந்திரன் அஷ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் இந்திய அணியில் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, 6 பேட்ஸ்மேன் + 5 பவுலர்கள் ஃபார்முலாவில் இந்தியா விளையாட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

5 ஸ்பெஷலிஸ்ட்ஸ்

5 ஸ்பெஷலிஸ்ட்ஸ்

இதுகுறித்து பிடிஐ-க்கு விரிவாக பேட்டி அளித்துள்ள சேவாக் "வரும் ஜூன் 18ம் தேதி சவுத்தாம்ப்டன் விக்கெட் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால், நான் எப்போதும் நம்பும் ஒரு விஷயம் என்னவெனில், அணி முழு பலத்தோடு விளையாட வேண்டும் என்பதே. இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் விளையாடினால், மொத்தம் 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் அணியில் இருப்பர்கள்.

பேட்ஸ்மேனை இழக்கலாம்

பேட்ஸ்மேனை இழக்கலாம்

ஆட்டத்தில் கடைசி இரு நாளில், ஸ்பின்னர்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நாம் நம்புகிறேன். ஸ்பின்னர்கள் என்பதைத் தாண்டி அஷ்வினும், ஜடேஜாவும் தகுதியான ஆல் ரவுண்டர்கள் கூட. இது அணியின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கும். இருவரும் சேர்ந்து அணியில் இருக்கும் போது, நீங்கள் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேனை தாராளமாக இழக்கலாம்.

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்

நியூசிலாந்தை பொறுத்தவரை டிரெண்ட் போல்ட் - சவுதி பவுலிங் கூட்டணி, நிச்சயம் இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இருவரும், இரு திசையிலும் பந்தை மிக அற்புதமாக வீசக் கூடியவர்கள். அதிலும், இருவரும் ஜோடி போட்டு பந்து வீசினால், இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரிக்கும். போல்ட் vs ரோஹித் ஷர்மா என்ற மோதலைத் தான் நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன். போல்ட்டின் தொடக்க ஓவர்களை எப்படியாவது சமாளித்து ரோஹித் நின்றுவிட்டால், அதன் பிறகு ரோஹித்தின் ஆட்டம் கண்கொள்ளா காட்சியாகிவிடும். ரசிகர்களுக்கும் அது செம விருந்தாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, June 12, 2021, 20:32 [IST]
Other articles published on Jun 12, 2021
English summary
Sehwag picks India's bowling combination WTC final - சேவாக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X