அந்த வீரர் ஒரு குட்டி பொல்லார்ட்... தமிழக வீரருக்கு சேர்ந்த புகழ்.. சேவாக்கின் கணிப்பு... வேற லெவல்!

தமிழக வீரர் ஒருவரை பார்க்கும் போது இளம் வயதில் பொல்லார்ட்டை பார்த்ததை போல உள்ளதாக முன்னாள் வீரர் சேவாக் புகழ்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டாலும், அதில் நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்தும், வியக்கவைத்த வீரர்கள் குறித்தும் பேச்சுக்கள் அடங்கவில்லை.

அந்த இடத்தில் சிக்கியிருக்க வேண்டும்.. தப்பிவிட்டது.. ஆர்சிபி-ல் நடந்த அந்த மாற்றங்கள்.. முழு விவரம்

குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் வழக்கத்திற்கு மாறாக இளம் வீரர்களின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தது.

பெரிய இன்னிங்ஸ்

பெரிய இன்னிங்ஸ்

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 29 லீக் தொடர்கள் மட்டுமே நடந்தாலும், இதில் மிகப்பெரிய இன்னிங்ஸ்கள் பல பார்க்கப்பட்டன. ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் (119), ஜாஸ் பட்லர் (124), ஆர்சிபியின் தேவ்தத் பட்டிக்கல் (101), என 3 பேரின் அதிரடி சதங்கள் அரங்கேறின. இந்நிலையில் இந்த தொடரில் இளம் வீரர் ஷாருக்கானின் சதமும் அரங்கேறும் என சேவாக் தெரிவித்துள்ளார்.

குட்டி பொல்லார்ட்

குட்டி பொல்லார்ட்

இதுகுறித்து பேசிய அவர், ஷாருக்கானை பார்க்கும் போது கடந்த 2010ம் ஆண்டு ஐபிஎல்-ல் இளம் வீராக பொல்லார்ட் களமிறங்கியதுதான் நியாபம் வருகிறது. அப்போது அனைவரின் கவனமும் பொல்லார்டின் பக்கம் இருக்கும். ஏனென்றால் நின்ற இடத்தில் இருந்தே அவர் அசால்டாக சிக்ஸர் விளாசுவார். ஷாருக்கானுக்கும் அதே திறமை உள்ளது. அவர் அதே போன்று தான் சில ஆட்டங்களில் இந்தாண்டு விளையாடினார். ஆனால் அது பெரிய இன்னிங்ஸாக மாறவில்லை. இதற்கு காரணம் அவர் லோ ஆர்டரில் களமிறக்கப்பட்டது தான்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

தமிழகத்தை சேர்ந்த வீரரான ஷாருக்கான் இந்தாண்டு பஞ்சாப் அணியால் ரூ.5.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அந்த அணியில் 6வது வீரராக களமிறங்கிய அவர், 6*, 47, 15*, 22, 13, 0, 4 என்ற குறைந்த அளவிலான ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் அவரை டாப் ஆர்டரில் களமிறக்க வேண்டும் என சேவாக் கூறியுள்ளார்.

அவருக்கான வாய்ப்பு கிடைக்கும்

அவருக்கான வாய்ப்பு கிடைக்கும்

அவர், ஷாருக்கானுக்கு மட்டும் டாப் ஆர்டரில் வாய்ப்பு கிடைத்தால், அவருக்கான நாள் வரும் போது சதம் அடித்து அசத்துவார். சில வீரர்கள் ஒரு பந்தை தவறவிட்டுவிட்டால் ஏமாற்றம் அடைவார்கள். ஆனால் ஷாருக்கான் முந்தைய பந்து எப்படி சந்தித்தோம் என்பதை பற்றி யோசிக்காமல் விளையாடும் ஒரு வீரர். அப்படிபட்ட வீரர்கள் தான் மிகப்பெரும் வெற்றிகளை பெறுவார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Virender Sehwag's huge praise for TN youngster in IPL 2021
Story first published: Sunday, May 16, 2021, 12:31 [IST]
Other articles published on May 16, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X