For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Happy Birthday Dada: 56 இன்ச் மார்பளவு கேப்டன்.. தாதாவுக்கு பர்த்டே வாழ்த்து சொன்ன சேவாக்

டெல்லி: 56 இன்ச் கேப்டன் என்று முன்னாள் கேப்டன் கங்குலியை வித்தியாசமான முறையில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சேவாக்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அசைக்க முடியாத கேப்டன்களில் ஒருவராக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. வங்கப்புலி, தாதா என்றும் அவர் அழைக்கப் படுபவர். கொல்கத்தாவைச் சேர்ந்தவர். 1996ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து அசத்தியவர்.

அதிரடி வீரர் சேவாக், சிக்சர் சாதனை நாயகன் யுவராஜ் சிங், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோரின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தவர். களத்தில் ஆக்ரோஷ கேப்டன் என பெயரெடுத்த கங்குலிக்கு இன்று பிறந்த நாள்.

டெஸ்ட் அணி கேப்டன்

டெஸ்ட் அணி கேப்டன்

அறிமுகமான 4 வருடங்களில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டார். 2001ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் இந்தியா பெற்ற வெற்றி இவரை உலகை அறிய செய்தது. 2003ம் ஆண்டு இந்திய அணியை உலக கோப்பையின் இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றவர்.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

2004ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சரித்திர சாதனை நிகழ்த்தியவர். இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7,213 ரன்கள் அடித்திருக்கிறார். அதேபோல் 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்கள் குவித்திருக்கிறார். 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் 2-0 என இந்தியா வென்ற பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு முழுக்கு போட்டார்.

ஆலோசகர்

ஆலோசகர்

அதன் பிறகு, தொடர்ந்து விமர்சகர், வர்ணனையாளர் மற்றும் மேற்குவங்க கிரிக்கெட் வாரிய தலைவராகவும் இருக்கிறார். அண்மையில், ஐபிஎல் தொடரின் டெல்லி அணிக்கு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார்.

சேவாக் வாழ்த்து

சேவாக் வாழ்த்து

கங்குலியின் ஆதரவில் திறமையை வளர்த்து அணியில் கோலோச்சியவர்களில் ஒருவர் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக். அவர் கங்குலிக்கு வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை ட்விட்டரில் தெரிவித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

56 இன்ச் மார்பளவு

ஹேப்பி பர்த்டே டு 56 இன்ச் கேப்டன் தாதா 56 இன்ச் மார்பளவு, 8ம் தேதி 7வது மாதம் (ஜூலை) பிறந்ததால் 8*7=56 எனவும், உலக கோப்பை தொடர்களில் கங்குலியின் சராசரி 56. இவை அனைத்தையும் சேர்த்து 56 கேப்டன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Monday, July 8, 2019, 11:30 [IST]
Other articles published on Jul 8, 2019
English summary
Virender sehwag wishes former captain sourav ganguly on his birthday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X