For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தான் அணிக்கு 'பேஷா' பயிற்சி தரலாமே.. ரிச்சர்ட்ஸ்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட தான் தயாராக இருப்பதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.

தற்போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக வக்கார் யூனிஸ் உள்ளார். அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ள ரிச்சர்ட்ஸ், எதிர்காலத்தில் இதுகுறித்து யோசிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ரிச்சர்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் ரெடிதான்

நான் ரெடிதான்

இதைத் தொடர்ந்து அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற யோசனைகள் வர ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து ரிச்சர்ட்ஸ் கூறுகையில், நான் தயார்தான். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நான் மறுக்க மாட்டேன்.

வக்கார் சூப்பர்

வக்கார் சூப்பர்

ஆனால் தற்போது வக்கார் யூனிஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எதிர்காலத்தில் என் மீது நம்பிக்கை வைத்து பயிற்சியாளராக செயல்பட அழைப்பு வந்தால் அப்போது அதுகுறித்து யோசிக்கலாம். ஆனால் வாய்ப்பு வந்தால் நிச்சயம் நான் மறுக்க மாட்டேன் என்றார் ரிச்சர்ட்ஸ்.

செம பேட்ஸ்மேன்

செம பேட்ஸ்மேன்

உலக அளவில் அட்டகாசமான கிரிக்கெட் வீரர்களில் ரிச்சர்ட்ஸுக்குத் தனி இடம் உண்டு. 63 வயதாகும் ரிச்சர்ட்ஸ் அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மனதிலும் கண்டிப்பாக ரிச்சர்ட்ஸுக்கு இடம் இருக்கும்.

பாகிஸ்தானுக்கு வர வேண்டும்

பாகிஸ்தானுக்கு வர வேண்டும்

ரிச்சர்ட்ஸ் மேலும் கூறுகையில் சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு வர மறுப்பது வருத்தத்திற்குரியது. உலக கிரிக்கெட் சமுதாயத்தில் பாகிஸ்தானும் ஒரு முக்கிய உறுப்பினர். அதைப் புறக்கணிக்கக் கூடாது.

நிலைமை மாற வேண்டும்

நிலைமை மாற வேண்டும்

தற்போது சர்வதேச அணிகள் இங்கு வருவதில்லை என்பது சோகமானது. இந்த நிலைமை மாற வேண்டும். மாறும் என்று நம்புகிறேன். விரைவில் இது நடக்க வேண்டும் என்றார் ரிச்சர்ட்ஸ்.

Story first published: Tuesday, February 16, 2016, 10:43 [IST]
Other articles published on Feb 16, 2016
English summary
The West Indian batting legend Sir Vivian Richards is open to the idea of coaching Pakistan national cricket team though he feels that the current coach Waqar Younis is doing a "great job".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X