For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 டக் அவுட்.. வெறும் 4 சிக்ஸ்.. டோட்டல் வேஸ்ட்டு.. முதல் மேட்ச்சிலேயே கடுப்பான ரசிகர்கள்!

செயின்ட் வின்சென்ட் : கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையே ஒரு சில சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்று துவங்கி உள்ளது.

Recommended Video

Vincy Premier League 2020 : Grenadines Divers vs Salt Pond Breakers match 1

அந்த வின்சி பிரீமியர் லீக் என்ற அந்த டி10 போட்டித் தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இரண்டு அணிகளிலும் சேர்த்து ஆறு வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். டி10 போட்டி என்பதால் உச்சகட்ட அதிரடி ஆட்டம் ஆடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் மொத்தமே 4 சிக்ஸர்கள் தான் அடிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பையை தள்ளி வைக்க எந்த நிர்பந்தமும் செய்யவில்லை... பிசிசிஐடி20 உலக கோப்பையை தள்ளி வைக்க எந்த நிர்பந்தமும் செய்யவில்லை... பிசிசிஐ

வின்சி பிரீமியர் லீக் துவக்கம்

வின்சி பிரீமியர் லீக் துவக்கம்

வெஸ்ட் இண்டீஸ்-ஐ சேர்ந்த செயின்ட் வின்சென்ட் அண்ட் கிரெனடின்ஸ் என்ற கரீபிய நாட்டில் வின்சி பிரீமியர் லீக் என்ற பத்து ஓவர் போட்டிகள் கொண்ட டி10 தொடர் துவங்கி உள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவுமே நடைபெறாத நிலையில் இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்த தொடரின் முதல் போட்டியில் சால்ட் பான்ட் ப்ரேக்கர்ஸ் - கிரெனடின்ஸ் டைவர்ஸ் அணிகள் மோதின. முதலில் கிரெனடின்ஸ் அணி ஆடியது. அந்த அணி துவக்கத்தில் அதிரடியாக ஆடியது. ஷேம் பிரவுன் அதிரடி ஆட்டம் ஆடினார்.

பிரவுன் அதிரடி

பிரவுன் அதிரடி

பிரவுன் 14 பந்துகளில் 24 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க வீரர் வெய்ன் ஹார்ப்பர் 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன் பின் வந்த அனைவரும் ரன் எடுக்கவே திணறினர். டி10 போட்டி டெஸ்ட் போட்டியாக மாறியது.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

2.5 ஓவரில் 34 ரன்கள் எடுத்த கிரெனடின்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்களையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதாவது 7.1 ஓவரில் அடுத்த 34 ரன்களை மட்டுமே எடுத்தது கிரெனடின்ஸ். சால்ட் பான்ட் அணியின் வீரர் வெஸ்ரிக் ஸ்ட்ரோ ஹாட்ரிக் விக்கெட்களும் வீழ்த்தினார்.

ஹாட்ரிக் சாதனை

ஹாட்ரிக் சாதனை

கடைசி மூன்று பந்துகளில் 3 விக்கெட்கள் வீழ்த்தி ஸ்ட்ரா ஹாட்ரிக் சாதனை படைத்தார். வின்சி பிரீமியர் லீக்கின் முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை படைக்கப்பட்டது. சால்ட் பான்ட் அணியின் டெலோரான் ஜான்சன் 2 ஓவர்களில் 5 ரன்களும், சுனில் ஆம்ப்ரிஸ் 2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தனர்.

சால்ட் பான்ட் சொதப்பல்

சால்ட் பான்ட் சொதப்பல்

அடுத்து பேட்டிங் ஆடிய சால்ட் பான்ட் அணிக்கு சுனில் ஆம்ப்ரிஸ் 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாரான துவக்கம் அளித்தார். தொடர்ந்து மற்ற வீரர்களும் சொதப்பினர். கடைசி 3 ஓவரில் 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் உர்னேல் தாமஸ் எட்டாவது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார்.

வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

ஒன்பதாவது ஓவரில் 13 ரன்கள் எடுத்தது சால்ட் பான்ட் அணி. 92 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. சால்ட் பான்ட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டி அதிரடி சிக்ஸர்களை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது. சால்ட் பான்ட் அணி 3 சிக்ஸ், கிரெனடின்ஸ் அணி 1 சிக்ஸ் மட்டுமே அடித்தன.

Story first published: Saturday, May 23, 2020, 12:41 [IST]
Other articles published on May 23, 2020
English summary
Vincy Premier League 2020 : Grenadines Divers vs Salt Pond Breakers match 1 result. Salt Pond Breakers won by 3 wickets as Wesrick Strough got hatrick wickets.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X