For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டிராவிட் செய்யாததை சாதித்து காட்டிய லட்சுமணன்.. ராகுலுக்கு போட்ட கிடுக்குபிடி.. எப்படி சமாளித்தார் ?

ஹராரே : ஜிம்பாப்வேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தப் போட்டிகளுக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டார்.

Recommended Video

IND vs PAK போட்டி குறித்து Rohit Sharma தரமான விளக்கம்

சீனியர் வீரர்கள் இல்லாத நிலையில், இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி, ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது.

முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 189 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று அதிரடி சரவெடி தான்.. ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம்.. இந்திய வீரர்களிடையே கடும் போட்டிஇன்று அதிரடி சரவெடி தான்.. ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம்.. இந்திய வீரர்களிடையே கடும் போட்டி

லட்சுமணன் முடிவு

லட்சுமணன் முடிவு

இந்தப் போட்டியில் கேஎல் ராகுலின் கேப்டன்ஷி பாஸ் மார்க்கை பெற்றது. இதற்கு முழு காரணம் விவிஎஸ் லட்சுமணன் தான் என்று கருதப்படுகிறது. டாஸ் வென்ற உடன் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதற்கு முழு காரணம் லட்சுமணன் தான் என்று தெரியவந்துள்ளது.ஆட்டத்தின் முதல் சில மணி நேரம் பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக செயல்படும்.

ராகுலின் இடம்

ராகுலின் இடம்

இதனால் பந்துவீச்சை தேர்ந்து எடுக்கும் படி ராகுலிடம் லட்சுமணன் கூறி இருக்கிறார். மேலும், தென்னாப்பிரிக்க தொடரின் ஒருநாள் போட்டியின் போது ரோகித் காயம் காரணமாக இல்லை. அந்த தொடரில் கேப்டன் பதவயில் இருந்த ராகுல், தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால், ராகுலின் இடம் நம்பர் 4 தான் என்பதால், அதில் ஏன் அவர் விளையாடவில்லை என்று அப்போது பல விமர்சனம் எழுந்தது.

தடுத்த லட்சுமணன்

தடுத்த லட்சுமணன்

இதனை டிராவிட் கண்டுக்கொள்ளாமல் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல் இம்முறையும் ரோகித் இல்லாத நிலையில், கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க பிளான் போட்டுள்ளார். ஆனால் ராகுலின் முடிவுக்கு கிடுக்கு புடி போட்ட லட்சுமணன், ஒருநாள் அணியில் இனி உன்னுடைய இடம் நம்பர் 4 தான்.

நல்ல முடிவு

நல்ல முடிவு

இதனால் தொடக்க வீரராக களமிறங்கும் எண்ணத்தை கைவிட்டு, கடந்த தொடரில் நன்றாக விளையாடிய சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது தான் சரி என்று கூறியுள்ளார். ராகுல் தன்னுடைய சுயநலத்திற்காக, தொடக்க வீரராக களமிறங்கி இருந்தால், அது சுப்மான் கில்லின் உத்வேகத்தை பாதித்து இருக்கும். ஆனால், விவிஎஸ் அப்படி நடைபெறாமல் தடுத்து விட்டார்.

Story first published: Friday, August 19, 2022, 19:12 [IST]
Other articles published on Aug 19, 2022
English summary
VVS Laxman is the reason behind for the KL Rahul not opening in batting டிராவிட் செய்யாததை சாதித்து காட்டிய லட்சுமணன்.. ராகுலுக்கு போட்ட கிடுக்குபிடி.. எப்படி சமாளித்தார் ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X