உங்க இடத்துக்கு 2 பேர் வெயிட்டிங்... நியாபகம் வச்சிட்டு ஆடுங்க..சுப்மன் கில்லுக்கு லக்‌ஷ்மண் அட்வைஸ்

அகமதாபாத்: இங்கிலாந்து தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் இளம் வீரர் சுப்மன் கில்-க்கு முன்னாள் வீரர் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் சொதப்பி வருகிறார். 4வது டெஸ்டிலும் அவர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இந்நிலையில் சுப்மன் கில்-க்கு டெக்னிக்கல் பிரச்னை இருப்பதாகவும், அவர் வாய்ப்புக்காக காத்திருக்கும் முக்கிய வீரர்களை எண்ணிப் பார்க்கவேண்டும் எனவும் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

அசத்தல்

அசத்தல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமான சுப்மன் கில் அசத்தல் ஆட்டம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார். அவர் அந்த தொடரில் முறையே 45, 35*, 50, 31, 7 , 91 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாய் அமைந்தார்.

சொதப்பல்

சொதப்பல்

ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடியதன் காரணமாக நடப்பு இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த தொடரில் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள கில் ஒரே ஒரு 50+ ஸ்கோர் அடித்துள்ளார். மற்ற அனைத்து போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார்.

4வது டெஸ்ட்

4வது டெஸ்ட்

இதுவரையிலான 3 டெஸ்டிலும் பிட்ச்சானது சாதகமாய் இல்லாதது பேட்ஸ்மேன்களின் சொதப்பல்களுக்கு காரணமாக கூறப்பட்டது. ஆனால் 4வது டெஸ்ட் போட்டியில் பிட்ச்சானது பேட்ஸ்மேன்களுக்கும் சிறிது சாதகமாக இருந்தது. ஆனால் இப்போட்டியிலும் சுப்மன் கில் வந்த வேகத்தில் டக் அவுட்டாகி நடையை கட்டினார். இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அட்வைஸ்

அட்வைஸ்

இது குறித்து பேசிய லக்‌ஷ்மண், கில்லுக்கு சிறிது டெக்னிக்கல் பிரச்னை உள்ளது. அவர் வலது காலை மிக முன்னெடுத்து வைப்பதால் அதிக ஸ்கோர் அடிப்பது சிரமம். அவர் மீது தற்போது பெரிய பிரஷர் போடப்படுகிறது. இதனால் அவர் கவனமாக ஆட வேண்டும். மேலும் கில், அவரின் இடத்திற்கு கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் போன்ற சிறந்த வீரர்கள் காத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
VVS Laxman opens up on Shubman Gill's Poor performance in England tour
Story first published: Friday, March 5, 2021, 17:48 [IST]
Other articles published on Mar 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X