ஜெர்ஸி நம்பரில் இப்படி ஒரு விளையாட்டா.... குறும்புக்கார ஹர்பஜன்... உண்மையை உடைத்த லக்‌ஷ்மணன்

டெல்லி: ஹர்பஜன் சிங்கின் ஜெர்ஸி நம்பருக்கு பின்னால் உள்ள சுவாரஸ்ய காரணத்தை முன்னாள் வீரர் விவிஎஸ்.லக்‌ஷ்மண் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியில் மிக சிறப்பாக பங்காற்றியவர்களில் ஒருவர் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். இவர் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு எந்த போட்டியில் விளையாடாமல் உள்ளார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் 1999ம் ஆண்டும் தனது ஜெர்ஸி நம்பரை தேர்வு செய்த முறை வெளிவந்து அனைவருக்கும் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

நம்பர்

நம்பர்

கிரிக்கெட் உலகில் வீரர்களின் ஜெர்சி நம்பர் என்பது மிகவும் செண்டிமண் நிறைந்த ஒன்று. நம்பர் 10 என்று கூறினால் சச்சின் டெண்டுல்கர் நிறைய பேருக்கு நியாபகம் வருவார். அதே போல் தோனியின் நம்பர் 7 ஜெர்ஸி, கோலியின் 18 ஜெர்ஸி என கிரிக்கெட் ரசிகர்கள் நன்கு நியாபகம் வைத்திருப்பார்கள். ஜெர்ஸி நம்பர்களுக்கு பின்னால் முக்கிய காரணம் இருக்கும். ஆனால் ஹர்பஜனின் ஜெர்ஸி நம்பருக்கு பின்னால் உள்ள காரணம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை

உண்மை

இது குறித்து பேசிய லக்‌ஷ்மண், 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் மேனேஜர் எங்களிடம் உங்களுக்கு ஜெர்ஸி பின்னால் என்ன நம்பர் பதிக்க வேண்டும் எனக் கேட்டார். அதற்கு ஹர்பஜன் சிங் நாம் ஏர் இந்தியா விமானத்தின் நம்பர் வேண்டும் எனக்கூறியது வியப்பை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.

விளக்கம்

விளக்கம்

இதற்கு விளக்கமளித்துள்ள ஹர்பஜன் சிங், நான் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப ஏர் இந்தியா விமானத்தில் தான் செல்வேன். எனவே அதன் நம்பரான A1777 என்பதை பொறித்த ஜெர்ஸியுடன் நான் அந்த விமானத்தில் பயணித்து இந்தியா வர விரும்பினேன். இது ஒரு நன்றி தெரிவிப்பது போன்றது என தெரிவித்தார்.

இரு ஜாம்பவான்கள்

இரு ஜாம்பவான்கள்

லக்‌ஷ்மண் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் இந்திய அணியின் ஜாம்பவான்களாக திகழ்கின்றனர். லக்‌ஷ்மண் 8,781 ரன்களை குவித்துள்ளார். அதே போல ஹர்பஜன் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் 417 விக்கெட்டுடன் உள்ளார். அதே போல் ஒரு நாள் போட்டிகளில் 269 விக்கெட்களும் டி20 போட்டியில் 25 விக்கெட்களும் எடுத்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
VVS Laxman reveals the story behind Harbhajan Singh’s jersey number
Story first published: Friday, March 5, 2021, 18:19 [IST]
Other articles published on Mar 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X