For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பவுன்சர் மன்னன் வாக்னரிடம் வீழ்ந்த வங்கதேசம்… வெலிங்டனிலும் வெற்றி… தொடரை கைப்பற்றி நியூசி. அபாரம்

வெலிங்டன்: வங்கதேச அணிக்கு எதிராக 2வது டெஸ்டில் நியூசிலாந்து அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2வது போட்டி கடந்த 9ம் தேதி தொடங்கியது. போட்டியின் முதல் இருநாளில் மழை விளையாடியது. அதனை தொடர்ந்து 3ம் நாளில் ஆட்டம் தொடங்கியது.

ISL 2019 : மும்பை அணியால் 6 கோல் அடிக்க முடியுமா? பரபரப்பான நிலையில் கடைசி அரையிறுதி ஆட்டம்! ISL 2019 : மும்பை அணியால் 6 கோல் அடிக்க முடியுமா? பரபரப்பான நிலையில் கடைசி அரையிறுதி ஆட்டம்!

முதல் இன்னிங்சில் 211

முதல் இன்னிங்சில் 211

டாஸ் வென்ற நியூசிலாந்து, வங்கதேச அணியை பேட்டிங் செய்யுமாறு கூறியது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் எடுத்தது.

432 ரன்களுக்கு டிக்ளேர்

432 ரன்களுக்கு டிக்ளேர்

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 432 ரன்கள் குவித்தது. வங்கதேசத்தைவிட 221 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்தது.

டெய்லர் 200 ரன்கள்

டெய்லர் 200 ரன்கள்

அந்த அணியின் நட்சத்திர வீரர் ராஸ் டெய்லர் 200 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 107 ரன்களும் எடுத்தனர். பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், மூன்று விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்தது.

5ம் நாள் ஆட்டம்

5ம் நாள் ஆட்டம்

தொடர்ந்து ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நியூசிலாந்து அணியின் வாக்னர் பந்துவீச்சை வங்கதேச அணியினர் சமாளிக்க முடியாமல் திணறினர். வங்கதேச அணியினர் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணம்இருந்தனர். மிதுன் 47 ரன்களும், சர்கார் 28 ரன்களும், கேப்டன் மமுதுல்லா 67 ரன்களும் எடுத்தனர்.

விக்கெட்டுகள் காலி

விக்கெட்டுகள் காலி

வங்கதேச அணி 170 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. தொடர்ந்து வந்த லிட்டன் தாஸ் ஒரு ரன்னில் திருப்தியாக வெளியேற... பின்னர் வந்த டெய்ல்-என்ட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததனர்.

நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்து வெற்றி

இறுதியாக 209 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வங்கதேச அணி, நியூசிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்து அணி சார்பாக வாக்னர் ஐந்து விக்கெட்டுகளையும், போல்ட் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

போட்டியின் ஆட்டநாயகனாக ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 16ம் தேதி தொடங்கவுள்ளது.

Story first published: Tuesday, March 12, 2019, 10:52 [IST]
Other articles published on Mar 12, 2019
English summary
Wagner Demolishes Bangladesh as New Zealand Take Series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X