For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆர்ச்சருகிட்ட செமத்தியா அடி வாங்குனேன்..! அப்புறமும் நான் ஏன் விளையாண்டேன் தெரியுமா..?

லார்ட்ஸ்: நான் கீழே விழுந்தும் மீண்டும் விளையாட காரணம், ஏற்கனவே அடிபட்டு கிடந்த ஸ்மித் நினைத்து கொண்டேன் என்று ஆஸி. வீரர் மார்ஸ் லாம்பஷே கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. லார்ட்சில் நடைபெற்ற தொடரின் 2வது போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. முதல் இன்னிங்சில் ஆர்ச்சர் பந்துவீச்சில் செமத்தியாக அடி வாங்கிய ஸ்மித் 2வது இன்னிங்சில் விளையாடவில்லை.

அவருக்கு பதில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக மாற்று வீரர் பேட்டிங் செய்த அதிசய நிகழ்வு நிகழ்ந்தது. அந்த சாதனையை நிகழ்த்தியவர் மார்னஸ் லாபுசாக்னே.

தோனியிடம் தோற்று... கோலியை சாய்க்க நினைக்கும் இந்திய இளம் வீரர்..! வைரல் வீடியோ..! தோனியிடம் தோற்று... கோலியை சாய்க்க நினைக்கும் இந்திய இளம் வீரர்..! வைரல் வீடியோ..!

2வது பந்தில் அடி

2வது பந்தில் அடி

ஆனால் மார்ஸ் லாம்பஷே பேட் செய்ய இரண்டாவது இன்னிங்சில் வந்ததும் ஆர்ச்சர் பந்துவீச்சில் 2வது பந்திலேயே ஹெல்மெட்டில் அடி வாங்கினார். அவருக்கும் பலமான அடி ஹெல்மெட்டில் விழுந்தது.

சிறய பரிசோதனை

சிறய பரிசோதனை

ஆனால் சின்ன பரிசோதனைக்கு பிறகு அவர் மீண்டும் உடனே எழுந்து விளையாட தயாரானார். அதற்கான காரணத்தையும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

மன உறுதி இருந்தது

மன உறுதி இருந்தது

ஸ்மித்துக்கு பதிலாக பேட் செய்ய வரும் போது மிக மன உறுதியுடன் களத்திற்கு வந்தேன். ஆனால் 2வது பந்திலேயே பவுன்சர் மூலம் தாக்கப்பட்டு கீழே விழுந்தேன். ஆனால் உடனே எழுந்து கொண்டேன்.

காப்பாற்ற முடிவு

காப்பாற்ற முடிவு

எனக்கு மீண்டும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் வர காரணம்.. ஸ்மித் தான். ஏற்கனவே ஸ்மித் அடிபட்டு விளையாட முடியாமல் உள்ளார். ஒரு பக்கம் அணியில் 2 விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால் அணியை காப்பாற்ற நினைத்தேன்.

அடியை மறந்தேன்

அடியை மறந்தேன்

மேலும் அணியின் கேப்டன் என்னிடம் அதை மட்டுமே எதிர்பார்ப்பார் என்றும் தெரியும். எனவே அடிபட்ட சூழலை அப்படியே மறந்து விட்டு தொடர்ந்து பேட் செய்தேன்.

டிராவுக்கு உதவியது

டிராவுக்கு உதவியது

அணியை டிராவை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டும் என்பது மட்டும் தான் எனது மனதில் ஓடி கொண்டிருந்தது. அந்த நினைப்பே என்னை அந்த நிகழ்வு இருந்து மீட்டது. மீண்டும் சிறப்பாக விளையாடி போட்டியை டிரா செய்ய உதவியது என்றார்.

Story first published: Tuesday, August 20, 2019, 13:01 [IST]
Other articles published on Aug 20, 2019
English summary
Wanted to get in to challenge says australian batsman marcus labuschagne.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X