For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - பாக். லிஸ்ட்லையே இல்லை.. என்னய்யா சாம்பியன்ஷிப் நடத்துறீங்க? விளாசிய முன்னாள் பாக். வீரர்!

கராச்சி : இந்தியா - பாகிஸ்தான் போட்டி இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுவதில் அர்த்தமே இல்லை என கூறி இருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ்.

ஐசிசி கடந்த ஆண்டு முதல் இரு ஆண்டுகளுக்கு நடைபெறும் வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது.

இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவில்லை. அது குறித்து தான் வக்கார் யூனிஸ் ஐசிசியை விமர்சித்து இருக்கிறார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆகஸ்ட் 1, 2019 முதல் ஜூலை 2021 வரை நடைபெற உள்ளது. இதில் ஒன்பது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகள் பகுதி, பகுதியாக மோதி வருகின்றன. இந்த நீண்ட தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 10 அன்று லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.

புள்ளிகள் அமைப்பு

புள்ளிகள் அமைப்பு

இந்த தொடரில் ஒன்பது அணிகளும், ஒவ்வொரு டெஸ்ட் தொடராக மற்ற அணிகளுடன் மோதி வருகின்றன. இதில் ஒரு டெஸ்ட் தொடரில் எத்தனை போட்டிகள் இருந்தாலும், அந்த தொடருக்கு மொத்தமாக 120 புள்ளிகள் வழங்கப்படும்.

ஆறு தொடர்கள்

ஆறு தொடர்கள்

ஒவ்வொரு அணியும் ஆறு அணிகளுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டும். இரண்டு அணிகளுடன் டெஸ்ட் தொடரில் மோத வேண்டிய தேவை இல்லை. இந்திய அணியைப் பொறுத்தவரை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய ஆறு அணிகளுடன் மோதி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இல்லை

இந்தியா - பாகிஸ்தான் இல்லை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் இந்தியா டெஸ்ட் தொடரில் மோதவில்லை. பரபரப்பை கிளப்பும் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இந்த சாம்பியன்ஷிப்பில் நடக்காதது முதலில் விமர்சனத்தை சந்தித்தது.

2007 முதல்..

2007 முதல்..

இந்தியா கடைசியாக 2007இல் தான் பாகிஸ்தான் அணியுடன் டெஸ்ட் தொடரில் ஆடி உள்ளது. அதன் பின் சுமார் 13 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா, பாகிஸ்தான் அணியை தவிர்த்துள்ளது.

வக்கார் யூனிஸ் விமர்சனம்

வக்கார் யூனிஸ் விமர்சனம்

இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரரும், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும் ஆன வக்கார் யூனிஸ் இந்தியா - பாகிஸ்தான் போட்டி இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடப்பதை விமர்சித்துள்ளார்.

கஷ்டம் தான்

கஷ்டம் தான்

"இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசுகள் பேசிக் கொள்வது கூட கடினம் என்பதை நான் அறிவேன். ஆனால், ஐசிசி இந்த சாம்பியன்ஷிப் தொடரில் தானே முன்வந்து பேச வேண்டும்" என ஐசிசியை பஞ்சாயத்துக்கு அழைத்துள்ளார் யூனிஸ்.

ஐசிசி தலையிட வேண்டும்

ஐசிசி தலையிட வேண்டும்

"ஐசிசி தலையிட்டு ஏதாவது செய்ய வேண்டும். ஏனெனில், என்னைப் பொறுத்தவரை இந்தியா - பாகிஸ்தான் போட்டி இல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடப்பதில் அர்த்தமே இல்லை" என கடுமையாக சாடினார் வக்கார் யூனிஸ்.

டெஸ்ட் அறிமுகம்

டெஸ்ட் அறிமுகம்

இந்தியா - பாகிஸ்தான் எப்போதுமே இப்படித் தான் கிரிக்கெட்டில் போட்டி ஆடாமல் முரண்டு பிடித்துக் கொண்டே இருக்கும் என கூறிய அவர், அதனால்தான் தான் இந்திய அணிக்கு எதிராக அறிமுகம் ஆனதை மறக்க முடியாது என கூறி உள்ளார்.

சச்சின் அறிமுகம்

சச்சின் அறிமுகம்

இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஒரே போட்டியில் தான் வக்கார் யூனிஸ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் அறிமுகம் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வக்கார் யூனுஸ் அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சிலும், சச்சின் பேட்டிங்கில் உலகின் ஜாம்பவானாகவும் சாதித்தனர்.

Story first published: Wednesday, March 18, 2020, 17:01 [IST]
Other articles published on Mar 18, 2020
English summary
Waqar Younis says WTC without India - Pakistan match makes no sense
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X