For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திரும்பத் திரும்ப இதையே பண்ணிக்கிட்டு இருக்கீங்களே.. ஏன் இப்படி? பொங்கி எழுந்த வக்கார் யூனிஸ்!

Recommended Video

Waqar Younis slams PCB | பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக பொங்கிய வக்கார் யூனிஸ்!-வீடியோ

கராச்சி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் மோசமான செயல்பாடுகளால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் அணியின் மூத்த வீரர்களை கடுமையாக சாடி கருத்து கூறி இருக்கிறார்.

Waqar Younis slams Pakistan senior players for not retiring gracefully

மேலும், பாகிஸ்தான் அணியில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும், உலகக்கோப்பை முடிந்த உடன் நடக்கும் அதே காட்சிகள் தான் நடந்து வருவதாக கூறி இருக்கிறார்.

வக்கார் யூனிஸ் கூறியதில் முக்கிய விஷயங்கள் இது தான் - கடைசி நிமிடம் வரை உலகக்கோப்பை அணி எது என்பது இறுதி செய்யப்படவில்லை. மூத்த வீரர்கள் அணியில் இடம் பிடிக்க முயன்று வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்கள் மரியாதையுடன் ஓய்வு பெற வேண்டும் என சொல்வதற்கு யாருமே இல்லை. (பெயர் சொல்லாமல் ஷோயப் மாலிக்கை சுட்டிக் காட்டுகிறார்).

கடந்த சில வருடங்களாக இதே தான் நடக்கிறது. கடைசி நேரத்தில் மூத்த வீரர்களை அணிக்குள் சேர்த்து விடுகிறார்கள். பெரிய தொடர்களில் தோற்று விடுவோமோ என்ற அச்சம் தான் காரணம்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் கடைசி கடைசி ஓவரில் தடுமாறியது நடந்து இருக்கவே கூடாது. உடற்தகுதி, மூத்த வீரர்கள் போன்றவற்றை காட்டி அணித் தேர்வில் வளைந்து கொடுப்பது தான் பிரச்சனைக்கு மூல காரணம்.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக கங்குலி, சேவாக்! கனவு வேணா காணலாம்.. அப்ளிகேஷன் கூட போட முடியாது! இந்திய அணிக்கு பயிற்சியாளராக கங்குலி, சேவாக்! கனவு வேணா காணலாம்.. அப்ளிகேஷன் கூட போட முடியாது!

ஒவ்வொரு நான்கு வருடத்திற்கும் இதே வேலையை செய்கிறோம். கேப்டனை மாற்றுவது, பயிற்சியாளர்களை நீக்குவது, தேர்வுக்குழு தலைவரை பணி நீக்கம் செய்வது, உள்ளூர் கிரிக்கெட் அமைப்பு சரியில்லை என புலம்புவது என செய்த தவறுகளையே திரும்ப செய்து வருகிறோம். இவ்வாறு கடுமையாக விமர்சித்து இருக்கிறார் வக்கார் யூனிஸ்.

கடந்த 2016இல் வக்கார் யூனிஸ்-ஐ பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மிக்கி ஆர்தரை பயிற்சியாளராக நியமித்தனர். அதன் பின் பாகிஸ்தான் அணி 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வென்று அசத்தியது. எனினும், தற்போது உலகக்கோப்பை தொடரில் மோசமாக செயல்பட்டு, மீண்டும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. அதைத் தான் வக்கார் யூனிஸ் வெளுத்துக் கட்டி இருக்கிறார். எனினும், தனக்கு மீண்டும் பயிற்சியாளராகும் எண்ணம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, July 18, 2019, 13:37 [IST]
Other articles published on Jul 18, 2019
English summary
Waqar Younis slams Pakistan senior players for not retiring gracefully
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X