For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டில் சென்சார் சிப் பொருத்தி ஆடுகிறார் வார்னர்…!! இந்தியாவை தோற்கடிக்க ஆஸி.யின் புதிய திட்டம்

லண்டன்: ஆஸி. அதிரடி வீரர் தமது பேட்டில் சென்சார் பயன்படுத்தி விளையாட போகிறார் என்ற தகவல் கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

உலகக் கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கின்றனர். அது பலமான அணியாக இருந்தாலும்... சரி... இல்லாவிட்டாலும் சரி. ஆஸி. போன்ற ஜாம்பவான் அணிகளிலும் அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை.

அவர்களில் முக்கியமானவர் டேவிட் வார்னர். இந்தியாவுக்கு எதிரான முக்கிய ஆட்டத்துக்கு முன்பாக வலை பயிற்சியின் போது பரபரப்பை கிளப்பியவர். லண்டன் ஓவல் மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிக்காக, வலைப்ப யிற்சியில் ஈடுபட்டிருந்த வார்னருக்கு இங்கிலாந்து வீரர் ஜெய் கிஷான் பந்து வீசினார்.

இதுதான் வார்னர் அடி

இதுதான் வார்னர் அடி

அப்போது வார்னர் அடித்த பந்து எகிறிச் சென்று ஜெய் கிஷானை கடுமையாக தாக்கியது. அதனால் மைதானமே பரபரப்பானது, சிறிது நேரம் தனது பயிற்சியையும் வார்னர் நிறுத்தினார். பின்னர் ஜெய் கிஷானுக்கு எதுவும் ஆகவில்லை என்று அறிந்த பிறகே, வார்னர் பயிற்சியை தொடர்ந்தார்.

சென்சார் சிப்

சென்சார் சிப்

இந் நிலையில், இந்தியாவுக்கு எதிராக தயாராகியுள்ள வார்னர், எதிரணிகளை வீழ்த்த புதிய யுத்தியை கையாண்டுள்ளார். குறிப்பாக தாம் பயன்படுத்தும் பேட்டில் சென்சார் சிப் பொருத்தி விளையாடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேட்டின் நகர்வு

பேட்டின் நகர்வு

எதற்கு பேட்டில் சென்சார் சிப் என்று கேள்வி எழலாம். அதாவது, எதிரணியின் பந்துகள் வரும் வேகத்துக்கு ஏற்ப எவ்வாறு பேட்டை கொண்டு செல்கிறோம், பேட்டின் அசைவு இருக்கிறது, எந்த திசையில் பேட்டால் அடிக்கிறோம், எதிரணி வீரர்களின் பந்துகள், பேட்டில் மோதும் வேகம் ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட முடியும். அதற்கு தான் அவர் சென்சார் சிப்பை தமது பேட்டில் வைத்திருக்கிறார்.

அனுமதி அளித்த ஐசிசி

அனுமதி அளித்த ஐசிசி

இதுபோன்ற பேட்டில் சென்சார் சிப்பை பயன்படுத்த ஐசிசி, 2017ம் ஆண்டு முறைப்படி அனுமதி அளித்துவிட்டது. ஆனால், சர்வதேச அளவில் எந்த பேட்ஸ்மேனுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு இல்லை. ஆனால், இதை வார்னர் கண்டறிந்து இந்த சிப்பை தமது பேட்டின் கைப்பகுதியில் பொருத்தி இருக்கிறார்.

பேட்ஸ்மெனுக்கு அறிவுரை

பேட்ஸ்மெனுக்கு அறிவுரை

இந்த சிப்பை தயாரித்திருப்பது ஏதோ.. வெளிநாட்டு நிறுவனம் அல்ல. பெங்களூரை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. பேட் சென்ஸ் என்ற பெயரில் இருக்கும் இந்த சிப் எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார் போல் எவ்வாறு பேட்டை கொண்டு செல்லலாம் என்பது குறித்த அறிவுரை வழங்கும்.

எப்படி செயல்படுகிறது?

எப்படி செயல்படுகிறது?

குறிப்பாக பும்ரா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துக்கு ஏற்றார்போல பேட்டை எந்தளவுக்கு வேகமாக இயக்க முடியும் என்பதை புள்ளி விவரங்களோடு அலசி, இந்த சிப் கூறுமாம். கைப்பிடியில் பொருத்தப்பட்டுள்ள இந்த சிப், பேட்ஸ்மேன் பேட் செய்யும் போது அவரின் செயல்பாடு, பேட் நகர்தல், அதன் அதிர்வு உள்ளிட்டவை உள்வாங்கிக் கொண்டு, கிளவுட் ஸ்டோரேஜில் மொபைல் மூலம் சேமிக்கும் திறன் கொண்டது.

பேட்டிங் நுணுக்கங்கள்

பேட்டிங் நுணுக்கங்கள்

எந்த சக்தியுடன் அடிக்கிறோம், அடிக்கும் ஷாட்டின் வேகம், மணிக்கட்டை எவ்வாறு சுழற்றுகிறோம் என பல கோணங்களில் பேட்டிங்கின் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள முடியும். இதுகுறித்து இந்த சிப்பை தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் தலைவர் அதுல் ஸ்ரீவஸ்தவா கூறி இருப்பதாவது:

பயன்படுத்த வாய்ப்பு

பயன்படுத்த வாய்ப்பு

இந்த சிப்பை பயன்படுத்துவது குறித்து ஐசிசியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளோம். அந்த சிப்பை வார்னர் போட்டியில் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. பயிற்சியின் போது இந்த சிப்பை வார்னர் பயன்படுத்தினார். இதில் உள்ள புள்ளி விவரங்களை கொண்டு, வீரர்கள் தவறுகளை திருத்திக் கொள்ளலாம் என்றார்.

Story first published: Sunday, June 9, 2019, 17:32 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
Warner may use bat sensor against opposition teams, particularly india.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X