For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மது அருந்தாவிட்டால் நல்லது நடக்கும்னு வார்னரே சொல்கிறார் கேளுங்க!

By Siva

ஹைதாராபாத்: ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் இந்த போட்டிக்காக ஓராண்டு காலமாக பீர் குடிப்பதை நிறுத்தியுள்ளார்.

ஐபிஎல் 9வது சீசனில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது. வார்னர் பேட்டிங் செய்ய வாந்தாலே எதிரணியினர் அஞ்சும் அளவுக்கு விளாசித் தள்ளினார்.

இந்த சீசனில் கோஹ்லி அதிகபட்சமாக 973 ரன்கள் எடுத்தார். அவரை அடுத்து வார்னர் 848 ரன்கள் எடுத்தார்.

மது

மது

ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்தி கோப்பை வெல்ல நினைத்து வார்னர் கடந்த ஓராண்டு காலமாக மதுவை கையால் கூடத் தொடவில்லையாம். வழக்கமாக பீர் அடிக்கும் பழக்கம் உள்ளவர் வார்னர்.

வோட்கா நிறுவனம்

வோட்கா நிறுவனம்

வார்னர் தான் கிரிக்கெட் மூலம் சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை வோட்கா எனப்படும் ஒரு வகை மது தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அப்படி இருக்கையில் அவர் மது அருந்தாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன்?

ஏன்?

ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒரே எண்ணத்தை மட்டும் மனதில் வைத்து உடலை அதற்கேற்றவாறு பயிற்சி செய்ய வைக்கத் தான் மது அருந்துவதை நிறுத்தினாராம் வார்னர்.

வார்னர்

வார்னர்

ஒரு காலத்தில் பேட் பாய்(கெட்ட பையன்) என்று பெயர் எடுத்திருந்த வார்னர் தற்போது திருந்திவிட்டார். ஐபிஎல் இறுதிப் போட்டியில் அவ்வளவு நெருக்கடி இருந்தும் அவர் நிதானத்தை இழக்காமல் கூலாக இருந்தது அனைவரையும் கவர்ந்தது.

பீர் அடிக்கப் போகிறேன்

பீர் அடிக்கப் போகிறேன்

ஐபிஎல் கோப்பையை வென்றுவிட்டோம். இது கொண்டாட்டத்திற்கான நேரம். மறுபடியும் பீர் அடிக்கப் போகிறேன் என்று வார்னர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, June 1, 2016, 12:27 [IST]
Other articles published on Jun 1, 2016
English summary
Sunrisers Hyderabad skipper David Warner has skipped beer for an year in order to concentrate in IPL.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X