ஐ.பி.எல். ஏலத்தில் குதிக்க போகும் வார்னர்- கோடிகள் கொட்டுவது உறுதி

மும்பை: ஐ.பி.எல். தொடரில் அதிரடி தொடக்க வீரராக வலம் வந்தவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் ஐதாபாத் அணிக்காக விளையாடி வந்தார். வார்னர் தலைமையில் ஐதராபாத் அணி கோப்பையையும் வென்றது

ஆனால், நடந்து முடிந்த ஐ.பி.எல். சீசனில் வார்னர் சிறப்பாக விளையாடவில்லை என்று கூறி, அவரது கேப்டன் பொறுப்பை நீக்கியது சன்ரைசர்ஸ் அணி.

புஜாராவுக்கு திடீர் ஓப்பனிங் வாய்ப்பு ஏன்? புதிய பொறுப்பு தந்தாரா டிராவிட்புஜாராவுக்கு திடீர் ஓப்பனிங் வாய்ப்பு ஏன்? புதிய பொறுப்பு தந்தாரா டிராவிட்

விலகல்

விலகல்

மேலும், பிளேயிங் 11 இல் இருந்தும் வார்னர் நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த வார்னர், ஐ.பி.எல். தொடரின் போது சில போட்டிகளுக்கு மைதானத்திற்கே வரவில்லை. இந்த நிலையில் ஐதராபாத் அணியிலிருந்து விலகுவதாக வார்னர் அறிவித்தார்

மெகா ஏலம்

மெகா ஏலம்

வார்னர் ஐதராபாத் அணியிலிருந்து விலகியதால் ஏலத்திற்கு முன்பே அவரை வாங்க புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் முயற்சிகள் மேற்கொண்டன..இதனால் வார்னர் பெயர் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இடம்பெறாது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஐ.பி.எல். அணிகளுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.

உறுதி

உறுதி

ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஐ.பி.எல். குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு வார்னர் தாம் மெகா ஏலத்தை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் வார்னர் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பங்கேற்க போவது உறுதியாகிவிட்டது. வார்னரை வாங்க அணிகள் போட்டி போடும் என்பதால், அவரது ஊதியம் பல கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பண மழை

பண மழை

ஐ.பி.எல். தொடரில் பார்மில் இல்லாத வார்னர், டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார். மேலும், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் அடித்துள்ள வெளிநாட்டு வீரர், நல்ல கேப்டன் என பல அம்சங்கள் வார்னரிடம் உள்ளதால், வார்னர் காட்டில் இனி பண மழை தான்..

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Warner has decided to take Part in IPL Mega Auction. As David warner Leaves SRH camp. New IPL Teams offered the contract before IPL Auction.
Story first published: Sunday, December 5, 2021, 13:40 [IST]
Other articles published on Dec 5, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X