For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பள்ளத்துல இருந்தபடியே என்னோட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறேன்... ஷிகர் தவான் நெகிழ்ச்சி

புனே : இந்தியா -இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் துவக்க வீரர் ஷிகர் தவான்.

முதல் போட்டியில் 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அந்த போட்டியில் 98 ரன்களும் நேற்றைய போட்டியில் 67 ரன்களும் அடித்திருந்தார்.

இந்நிலையில் எப்போதும் பள்ளத்தில் இருந்தபடியே தன்னுடைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதாகவும் இது தனக்கு பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஷிகர்

சிறப்பான ஷிகர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான நேற்றைய 3வது போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ஷிகர்தவான் 67 ரன்களை அடித்திருந்தார். முதல் போட்டியிலும் 98 ரன்களை அடித்து சதத்தை மயிரிழையில் தவறவிட்டார். தனக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை ஒன்றிரண்டு தவிர்த்து மற்றவற்றை சிறப்பாக பயன்படுத்திக் கொள்பவர் ஷிகர் தவான்.

சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறேன்

சிறப்பாக பயன்படுத்தி கொள்கிறேன்

இந்நிலையில் தான் எப்போதும் பள்ளத்தில் இருப்பதாகவும், தன்னுடைய வாய்ப்பு கிடைத்தால் அதை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு பயன்படுத்துவதாகவும் ஷிகர் தெரிவித்துள்ளார். இவ்வாறு விளையாடுவது சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான பயிற்சி

சிறப்பான பயிற்சி

மேலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னை சர்வதேச போட்டிகளுக்காக தயாராக வைத்துக் கொள்வதாகவும் ஷிகர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது சிறப்பான பயிற்சியாக தனக்கு அமைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஒருநாள் தொடரில் ஷிகர் 171 ரன்களை குவித்துள்ளார்.

மகிழ்ச்சி அளிக்கிறது

மகிழ்ச்சி அளிக்கிறது

ஸ்டார் ஸ்போர்ட்சிற்காக பேசிய அவர், உள்ளூர் போட்டிகளில் விளையாடி பெற்ற பயிற்சியை கொண்டே தான் தற்போது ஒருநாள் தொடரையும் சிறப்பாக எதிர்கொண்டதாகவும் கூறினார். மேலும் பவுன்ஸ் டிராக்குகளில் விளையாடுவதை தான் மிகவும் மகிழ்ச்சியாக எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, March 29, 2021, 15:41 [IST]
Other articles published on Mar 29, 2021
English summary
I enjoy playing on bouncy tracks -Dhawan says
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X