For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவை காப்பாற்றிய சஞ்சு சாம்சன்.. இக்கட்டான சூழலில் செய்த விஷயம்.. நியூசி,க்கு 307 ரன்கள் இலக்கு

ஆக்லாந்து: நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. ஆக்லாந்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அட்டகாசமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி.. எங்கு? எப்படி பார்ப்பது? இந்திய நேரம் என்ன? முழு விவரம் இந்தியா-நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி.. எங்கு? எப்படி பார்ப்பது? இந்திய நேரம் என்ன? முழு விவரம்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

சிறப்பான பார்ட்னர்ஷிப்

இருவருமே மிகவும் நிதானமாக விளையாடிக்கொண்டு, கிடைக்கும் கேப்களில் பவுண்டரிகளை அடித்ததால் சீரான வேகத்தில் ரன் உயர்ந்தது. இருவருமே அரைசதம் கடந்ததால் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை சேர்த்தனர். ஆனால் இதன் பின்னர் தான் இந்திய அணிக்கு கண்டம் ஏற்பட்டது. சிறப்பாக ஆடி வந்த கேப்டன் ஷிகர் தவான் 72 ரன்களுக்கும், சுப்மன் கில் 50 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர்.

பண்ட் மீண்டும் சொதப்பல்

பண்ட் மீண்டும் சொதப்பல்

இதன் பின்னர் வந்த அதிரடி ஆட்டக்காரர்கள் ரிஷப் பண்ட் 15 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் 124 - 0 என இருந்த ஸ்கோர் 160 - 4 என மாறியது. இந்திய அணி 250 ரன்களாவது அடிக்குமா என சந்தேகம் ஏற்பட்ட போது, சஞ்சு சாம்சன் - ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி தரமான பதிலடியை கொடுத்தனர்.

முக்கிய பார்ட்னர்ஷிப்

முக்கிய பார்ட்னர்ஷிப்

ஒருபுறம் சஞ்சு சாம்சன் நிதானமாக சிங்கிள் அடித்து ரன் சேர்க்க, மற்றொருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக துவம்சம் செய்தார். இதனால் மலமலவென ரன்கள் உயர்ந்தன. இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டிற்கு 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களும் குவித்தனர்.

தமிழக வீரர் அதிரடி

தமிழக வீரர் அதிரடி

கடைசி நேரத்தில் உள்ளே வந்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ருத்ர தாண்டவம் ஆடினார். 16 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 37 ரன்களை அடித்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 306 ரன்களை குவித்தது,.

Story first published: Friday, November 25, 2022, 11:03 [IST]
Other articles published on Nov 25, 2022
English summary
Team India sets 307 runs target to Newzealand in 1st ODI, Washington sundar and shreyas iyer helps in a crtical situation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X