For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி இவரை டீமை விட்டு அசைக்க முடியாது.. அடுத்த பும்ராவாக மாறிய இளம் தமிழக வீரர்.. கோலி செம ஹேப்பி!

மும்பை : இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் வாஷிங்க்டன் சுந்தர் தன் குறிப்பிட்ட பந்துவீச்சு திறமையால் கேப்டன் கோலியை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ளார் வாஷிங்க்டன் சுந்தர். ஆல் - ரவுண்டர் என்பதால் அணியில் இடம் பெற்றார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இதுவரை அருமையாக பந்துவீசி, நல்ல பந்துவீச்சாளர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

பும்ரா, ஷமி இல்லை

பும்ரா, ஷமி இல்லை

டி20 அணியில் இளம் வீரர்களை பரிசோதித்து பார்க்கும் வகையில், பும்ரா, ஷமி ஆகிய பந்துவீச்சாளர்களுக்கு டி20 அணியில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. டி20 அணியில் இடம் பெற்று இருக்கும் வாஷிங்க்டன் சுந்தர் போட்டியின் முதல் அல்லது இரண்டாவது ஓவரை வீசி வருகிறார்.

சுழற் பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு

சுழற் பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம், வாஷிங்க்டன் சுந்தர் சுழற் பந்துவீச்சாளர். எனினும், கோலி அவரை தான் பவர்பிளே ஓவர்களில் பந்து வீச வைத்து வருகிறார். அது நல்ல பலன் அளித்து வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ்-இல் கலக்கல்

வெஸ்ட் இண்டீஸ்-இல் கலக்கல்

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்று டி20 போட்டிகளில் ஆடிய சுந்தர், இரண்டு விக்கெட்கள் மட்டுமே எடுத்தார். எனினும், அவரது பந்துவீச்சு சராசரி வெறும் 4.75 மட்டுமே. அது தான் அவரை சிறந்த பந்துவீச்சாளர் என்ற அடையாளத்துக்குள் வைத்துள்ளது.

பவர்பிளே ஓவர்கள்

பவர்பிளே ஓவர்கள்

வாஷிங்க்டன் சுந்தர் டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் தான் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார் என்ற தகவலும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. பவர்பிளே ஓவர்களில் சுந்தர் 24 ஓவர்கள் வீசி 9 விக்கெட்கள், சராசரி 15.56 வைத்துள்ளார்.

பவர்பிளேவில் கலக்கல்

பவர்பிளேவில் கலக்கல்

பவர்பிளே அல்லாத ஓவர்களின் போது இது வரை 15 ஓவர்கள் வீசி இருக்கிறார். அவற்றில் வெறும் 3 விக்கெட்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், சராசரி 33 ஆகும். பவர்பிளே ஓவர்களில் தான் சுந்தர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

பந்துவீச்சு சராசரி

பந்துவீச்சு சராசரி

மேலும், சுந்தரின் டி20 பந்து வீச்சு சராசரியான 15.56 தான் தற்போது உள்ள பந்துவீச்சாளர்களில் சிறந்த சராசரி எனவும் கூறப்படுகிறது. கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து குறைந்த பட்சம் 20 டி20 போட்டி ஓவர்கள் வீசிய பந்துவீச்சாளர்களில் குறைந்த சராசரி வைத்துள்ளவர் சுந்தர் தான்.

ஆல் - ரவுண்டர் திறமை

ஆல் - ரவுண்டர் திறமை

மேலும், வாஷிங்க்டன் சுந்தர் ஆல் - ரவுண்டர் என்பதால் அணியில் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளார். அணியில் எட்டாவது பேட்ஸ்மேனாக இருக்கிறார். பேட்டிங், பந்துவீச்சு இரண்டு வகையிலும் கேப்டன் கோலிக்கு பிடித்த வீரராக இருக்கிறார்.

கோலி மகிழ்ச்சி

கோலி மகிழ்ச்சி

பும்ரா, ஷமி இல்லாத நிலையில், பவர்பிளே ஓவர்களை வாஷிங்க்டன் சுந்தரிடம் கோலி கொடுக்கிறார் என்றால், அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை தான் அது காட்டுகிறது. அதை சுந்தரும் காப்பாற்றி வரும் நிலையில், கோலி மகிழ்ச்சியாக இருப்பதாகவே தெரிகிறது.

டி20 உலகக்கோப்பை நிச்சயம்

டி20 உலகக்கோப்பை நிச்சயம்

அதனால், வாஷிங்க்டன் சுந்தர் நிச்சயம் 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று ஆடுவார் என கூறுகிறார்கள். சாஹல், குல்தீப் போன்ற சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் ஆல் - ரவுண்டர் இல்லை என்பதாலேயே அணியில் வாய்ப்பை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 21, 2019, 19:37 [IST]
Other articles published on Sep 21, 2019
English summary
Washington sundar could be playing 2020 T20 world cup. As he impressed Captain Kohli with his powerplay bowling skill.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X