For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜிம்பாப்வே தொடரிலிருந்து வாசிங்டன் சுந்தர் விலகல்... இந்திய அணியில் ஆர்சிபி வீரருக்கு வாய்ப்பு

ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. முதலில் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டார், பிறகு கேஎல் ராகுல் முழு உடல் தகுதியை பெற்றதை அடுத்து அவர் கேப்டன் பொறுப்புக்கு வந்தார்,

இந்த நிலையில், பல நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் தமிழக வீரர் வாசிங்டன் சுந்தர் ஜிம்பாப்வே தொடருக்கு திரும்பினார்.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. இணையத்தை அதிர வைத்த டிக்கெட் விற்பனை.. எப்படி கட்டுப்படுத்தினர் தெரியுமா இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. இணையத்தை அதிர வைத்த டிக்கெட் விற்பனை.. எப்படி கட்டுப்படுத்தினர் தெரியுமா

வாசிங்டன் சுந்தர் விலகல்

வாசிங்டன் சுந்தர் விலகல்

ஜிம்பாப்வே தொடரில் விராட், ரோகித், ஸ்ரேயாஸ், சூர்யகுமார், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு ஒய்வு வழங்கப்பட்டது. இதனால் பெரிய அனுபவம் இல்லாத வீரர்கள் நடுவரிசையில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, இதில் வாசிங்டன் சுந்தரின் இடம் உறுதி என ரசிகர்கள் கருதிய நிலையில், அவர் காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து விலகினார்.

ஷாபாஸ் அகமது

ஷாபாஸ் அகமது

இந்த நிலையில், தற்போது ஆர்சிபி வீரர் ஷாபாஸ் அகமது, இந்திய அணிக்கு முதல் முறையாக தேர்வாகியுள்ளார். 27 வயதான அவர் பெங்கால் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். 18 ரஞ்சி போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 57 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பேட்டிங்கில் சராசரியாக 41 ரன்கள் அடித்துள்ளார்.

2 சதம்

2 சதம்

லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் 26 ஆட்டங்களில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாபாஸ் அகமது, 2 சதங்களை பேட்டிங்கில் அடித்து சராசரியாக 47 ரன்கள் அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 29 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாபாஸ் அகமது, பேட்டிங்கில் 279 ரன்களும்,பந்துவீச்சில் 13 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.

சரியான தேர்வு

சரியான தேர்வு

கடந்த சீசனில் ஷாபாஸ்அவருடைய பேட்டிங் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது,இதனால் வாசிங்டன் சுந்தருக்கு சரியான மாற்றாக தேர்வுக்குழு ஷாபாஸ் அகமதை எடுத்துள்ளது. அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தால், அவர் தனது திறமையை நிரூபிப்பார். எனினும் மற்றொரு ஆல்ரவுண்டரான குர்னல் பாண்டியாவின் பெயர் பரிசீலிக்கப்படாதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, August 16, 2022, 14:57 [IST]
Other articles published on Aug 16, 2022
English summary
Washington sundar is replaced by Shahbaz Ahmed for zim series ஜிம்பாப்வே தொடரிலிருந்து வாசிங்டன் சுந்தர் விலகல்... இந்திய அணியில் ஆர்சிபி வீரருக்கு வாய்ப்பு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X