For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிறிது நேரம் தாக்குப் பிடித்திருக்க முடியாதா? சதம் மிஸ்.டெய்ல் எண்டர்களை விமர்சித்த வாஷிங்டன் தந்தை

சென்னை: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக ஆடிய போதும் அவரது தந்தை ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது, இதில் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் பெரும் உதவியாக இருந்தார்.

கலக்கல் இந்திய வீராங்கனைகள்... ஐசிசி ஒருநாள் தரவரிசை.. முதல் 10 இடங்களில் 4 பௌலர்கள்! கலக்கல் இந்திய வீராங்கனைகள்... ஐசிசி ஒருநாள் தரவரிசை.. முதல் 10 இடங்களில் 4 பௌலர்கள்!

இந்நிலையில், சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்காதது குறித்து அவரது தந்தை டெயில் எண்டர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

தொடக்கம்

தொடக்கம்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி மூலம் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார். அப்போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 62 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 22 ரன்களும் எடுத்து அணிக்கு உதவினார். இதனையடுத்து அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும் சிறப்பாக ஆடிய அவர், 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் இருந்த வீரர்கள் அடுத்தடுத்து சரிந்ததால் அவரால் சதமடிக்க முடியவில்லை.

4வது டெஸ்ட்

4வது டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலும் அவர் சதமடிக்க வாய்ப்பு ஏற்பட்டது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய அவர் அவுட் ஆகாமல் 96 ரன்கள் எடுத்திருந்தார். இவர் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த போது, எதிர்முனையில் இருந்த இஷாந்த் ஷர்மா மற்றும் சிராஜ் ஆகியோர் அவுட்டாக்கி வெளியேற மீண்டும் சதம் அடிக்கும் வாய்ப்பு போனது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

இது குறித்து பேசியுள்ள வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சுந்தரின் பேட்டிங்கை ஏன் ஆச்சரியமுடன் பார்க்க வேண்டும். அவர் புதிய பந்தை எதிர்கொள்ளக்கூடியவர்தான். மறுமுணையில் இருந்தவர்களால் தான் நான் ஏமாற்றமடைந்தேன். அவர்களால் சிறிது நேரம் கூட தாக்குப்பிடித்திருக்க முடியாதா? ஒரு வேளை இந்தியாவுக்கு 10 ரன்கள் தேவை என்ற சூழலில் இவர்கள் இப்படி செய்திருந்தால் பெரிய தவறில்லையா? டெயில் எண்டர்கள் என்ன செய்தார்கள் என்பதை இளைஞர்கள் கற்றுக்கொள்ளக்கூடாது.

 சுந்தர் விளக்கம்

சுந்தர் விளக்கம்

இதுகுறித்து பேசிய வாஷிங்டன் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்யாதது வருத்தம் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். அணிக்காக தான் பங்களித்ததே மகிழ்ச்சியளிப்பதாகவும் தனக்கான நேரம் வரும் போது நிச்சயம் சதம் அடிப்பேன் எனவும் சுந்தர் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, March 7, 2021, 23:20 [IST]
Other articles published on Mar 7, 2021
English summary
washington Sundar's father Disappointed with tail-enders..
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X