For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிரியாணி கிடைக்கலனா ஹோட்டலுக்கே போக மாட்டீங்களா? செய்தியாளர் கேள்விக்கு கடுப்பான வாசிங்டன் சுந்தர்

ராஞ்சி : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்தபோது வாஷிங்டன் சுந்தர் கேள்வி ஒன்றுக்கு கடுப்பாகி பதிலளித்தார்.

177 என்ற இலக்கை இந்திய அணி எதிர்கொண்ட போது சுப்மன் கில் 7 ரன்களில் ஆட்டம் இழக்க, இந்திய அணி 15 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனை அடுத்து வாஷிங்டன் சுந்தர் இறுதியில் 28 பந்துகளில் அரை சதம் அடித்தார். எனினும் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய வாஷிங்டன் சுந்தர், இது ஏதேனும் ஒரு போட்டியில் இப்படி நடக்க வாய்ப்பு இருக்கிறது.

15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா! 15 ரன்னுக்கு 5 விக்கெட்கள்.. என்னா பிட்ச்யா இது??.. நம்பி ஏமாந்த நியூசிலாந்து.. வச்சு செய்த இந்தியா!

ஏதோ ஒருநாள்

ஏதோ ஒருநாள்

ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இப்படி நாங்கள் தோற்றோம் என்று கூற முடியாது. நாங்கள் செய்த தவறை சரி பார்ப்போம். ஆனால் என்னை பொறுத்தவரை இது போன்ற ஒரு போட்டி எப்போதாவது நமக்கு நிகழும்.நாங்கள் தொடக்கத்தில் கொஞ்சம் அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயம் ஆட்டத்தின் முடிவு எங்களுக்கு சாதகமாக வந்திருக்கும்.

கவலைப்பட தேவையில்லை

கவலைப்பட தேவையில்லை

ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இது போன்ற ஆடுகளத்தில் நீங்கள் எப்போதாவது விளையாட நேரிடும். எங்கள் அணி வீரர்கள் இதுபோன்ற ஆடுகளத்தில் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடி இருக்கிறார்கள். இந்த ஒரு போட்டியில் ஏற்பட்ட சரிவு குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறினார். வாஷிங்டன் சுந்தரின் இந்த பதிலுக்கு ஆட்சேபனை தெரிவித்த செய்தியாளர் ஒருவர், தொடக்க வீரர்களை மாற்றி விடலாமே என கேள்வி கேட்டார்.

கடுப்பான சுந்தர்

கடுப்பான சுந்தர்

இதற்கு பதில் அளித்த வாஷிங்டன் சுந்தர் மாற்றம் வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்களுக்கு பிடித்தமான பிரியாணி, ஹோட்டலில் கிடைக்கவில்லை என்பதற்காக நீங்கள் அதன் பிறகு ஹோட்டலுக்கு செல்லாமல் இருப்பீர்களா? டாப் ஆர்டரில் உள்ள அனைத்து வீரர்களுமே ரன் அடித்திருக்கிறார்கள். இது ஒரு மோசமான நாளாக அவர்களுக்கு அமைந்தது. இந்த மோசமான நாள் யாருக்கு வேண்டுமானாலும் அமையலாம். ஏன் நியூசிலாந்து அணி ராய்ப்பூரில் 108 ரன்கள் ஆட்டம் இழந்தார்களே?

பொறுமை வேண்டும்

பொறுமை வேண்டும்

இதன் காரணமாக நியூசிலாந்து அணி டாப் ஆர்டரை மாற்றினார்களா என்ன? இது ஒரு விளையாட்டுப் போட்டி. இங்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். இது போன்ற மோசமான நாட்களில் நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். விளையாட்டில் எந்த அணியும் தொடர்ந்து வெற்றி பெற முடியாது. அதேபோன்று ஒரே நாளில் 22 வீரர்களும் சிறப்பாக விளையாட முடியாது. நாங்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிவிட்டு தான் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறோம்

அவரும் மனிதர் தானே

அவரும் மனிதர் தானே

அர்ஷ்தீப் சிங் குறித்து குறை கூற விரும்பவில்லை. அவர் இந்தியாவுக்காக பல விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரும் ஒரு மனிதர் தானே எங்களுக்குள் போட்டி கடுமையாக இருக்கிறது. எதிரணியிலும் திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள் உம்ரான் மாலிக் நியூசிலாந்து, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். அவர் எந்த அளவுக்கு பந்து வீசுவார் என்று நம் அனைவருக்குமே தெரியும்.

திருத்தி கொள்வோம்

திருத்தி கொள்வோம்

உம்ரான் மாலிக்கிடம் இருக்கும் திறமை தனித்துவமானது. எங்களுடைய அணி நிர்வாகம் மிகவும் பொறுமையாக இருக்கிறது. நாங்கள் எங்கள் தவறில் இருந்து திருத்திக் கொள்ளும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. இனி வரும் போட்டிகளில் நாங்கள் பலமான அணியாக உருவெடுக்க வாய்ப்பு இருக்கிறது. டேரல் மிட்செல் சிறப்பாக விளையாடி கூடுதல் ரன்கள் நியூசிலாந்து அணிக்காக சேர்த்தார். அவர் மட்டும் அடிக்கவில்லை என்றால் நியூசிலாந்து அணி 150 ரன்களுக்கு சுருண்டு இருக்கும் என்று வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

Story first published: Saturday, January 28, 2023, 13:24 [IST]
Other articles published on Jan 28, 2023
English summary
Washington sundar slams journalist question about changing the top order
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X