For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின் இல்லையென்றால் என்ன.. ஆஸி.யை நடுங்க வைத்த தமிழக வீரர் வாஷிங்க்டன்.. களத்தில் என்ன நடந்தது?

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் இப்போது பிரிஸ்போனில் நடந்து வருகிறது. கடந்த 36 வருடமாக பிரிஸ்பானில் நடந்த எந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்தது இல்லை.

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது.

 பேட்டிங்

பேட்டிங்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கிய பவுலர்கள் இல்லை. பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகிய மூன்று முக்கியமான பவுலர்கள் இல்லை.ஆனாலும் இந்திய அணி பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

இன்று தொடக்கத்திலேயே வார்னர் விக்கெட்டை சிராஜ் எடுத்து சாதனை படைத்தார். வெறும் 1 ரன் எடுத்திருந்த நிலையில் வார்னர் அவுட் ஆனார். அதன்பின் மார்கஸ் வெறும் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷரத்துல் ஓவரில் அவுட் ஆனார்.

அவுட்

அவுட்

இரண்டு வீரர்களும் இப்படி அவுட் ஆன நிலையில் ஸ்மித் மட்டும் நிலையாக ஆடி வந்தார். இன்று அஸ்வின் இல்லாத காரணத்தால ஸ்மித் கவலையின்றி ஆடி வந்தார். ஆனால் ஸ்மித்திற்கு இன்னொரு தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் கடுமையான அழுத்தம் கொடுத்தார்.

அழுத்தம்

அழுத்தம்

கிட்டத்தட்ட அஸ்வின் போலவே இன்று வாஷிங்க்டன் பவுலிங் செய்தார். அதோடு அஸ்வின் பவுலிங் செய்த அதே லைன் மற்றும் லென்தில் வாஷிங்க்டன் பவுலிங் செய்தார். இதனால் வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் ஸ்மித் கடுமையாக திணறினார். அவரை பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் ஸ்மித் கடுமையாக திணறினார்.

திணறல்

திணறல்

இந்த நிலையில் சரியாக வாஷிங்க்டன் சுந்தர் ஓவரில் ஸ்மித் 36 ரன்கள் எடுத்து இருந்த போது ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அஸ்வின் போலவே சுந்தர் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் ஸ்மித் திணறினார். இதனால் பந்தை தவறாக கணித்த ஸ்மித் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

Story first published: Friday, January 15, 2021, 9:20 [IST]
Other articles published on Jan 15, 2021
English summary
Washington Sundar takes the wicket of Smith against Australia in the final test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X