For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சூப்பர் சுந்தர்.... 4 ஓவர்கள்ல 2 விக்கெட்டை வீழ்த்தி அதிரடி

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து 165 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக அமைத்தது.

இந்த போட்டியில் பௌலிங் செய்த வாஷிங்டன் சுந்தர், ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் ஆகிய முக்கிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியா அதிரடி வெற்றி... இஷான், கோலி அரைசதம்... தொடரை சமன் செய்தது இந்தியா!இந்தியா அதிரடி வெற்றி... இஷான், கோலி அரைசதம்... தொடரை சமன் செய்தது இந்தியா!

2வது டி20 போட்டி

2வது டி20 போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் இரண்டாவது போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 165 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக அளித்தது.

 148 ரன்கள்

148 ரன்கள்

இதையடுத்து தற்போது இந்திய அணி ஆடி வருகிறது. 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை அடித்துள்ளது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக பௌலிங் செய்த வாஷிங்டன் சுந்தர், அதிரடியாக ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 2 விக்கெட்டுகள்

2 விக்கெட்டுகள்

கடந்த டெஸ்ட் போட்டியிலும் இவர் அதிரடியாக தன்னுடைய ஆல்-ரவுண்ட் பர்பார்மன்சை நிரூபித்த நிலையில், தற்போது டி20 போட்டியிலும் தன்னுடைய சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு பவர்ப்ளேவில் பௌலிங் கொடுக்கப்பட்ட நிலையில் 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 நிரூபித்த சுந்தர்

நிரூபித்த சுந்தர்

குறைந்த ஓவர்கள் போட்டிகளிலும் தான் சிறப்பான பௌலர்தான் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். கடந்த போட்டியிலும் ஜேசன் ராய் விக்கெட்டை அவர் வீழ்த்திய நிலையில் தொடர்ந்து இந்த தொடரில் இரண்டாவது முறையாக அவரது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Sunday, March 14, 2021, 23:09 [IST]
Other articles published on Mar 14, 2021
English summary
Washington Sundar went for just 29 runs and took the wicket of Bairstow, Roy in 4 overs
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X