எங்க அப்பா போலீஸ் கமிஷ்னர்.. பாக்.அணியில் இருந்த சிறுபிள்ளை சண்டைகள்..வசீம் அக்ரம் கிளப்பிய பூகம்பம்

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வசீம் அக்ரம் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் அணியில் மிக முக்கியமான வீரர்களின் பட்டியலை எடுத்தால், அதில் இடம்பிடிப்பவர்களில் வசீம் அக்ரமும் ஒருவர். சுமார் 18 ஆண்டுகள் அனுபவம் கொண்ட அவர் சமீபத்தில் தனது சுயசரிதை ஒன்றை வெளியிட்டார்.

சுல்தான் என்ற பெயர் கொண்ட அந்த புத்தகத்தில் இருந்த ஒவ்வொரு விஷயமும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

2 மாதம் அடைத்து வைத்திருந்தார்கள்.. பாகிஸ்தானில் மட்டுமே இப்படி நடக்கும்..வசீம் அக்ரம் உருக்கம் 2 மாதம் அடைத்து வைத்திருந்தார்கள்.. பாகிஸ்தானில் மட்டுமே இப்படி நடக்கும்..வசீம் அக்ரம் உருக்கம்

 பரபரப்பு குற்றச்சாட்டு

பரபரப்பு குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் தன்னை ஒரு வேலைக்காரன் போல கொடுமை செய்ததாக கூறியிருந்தார். அதில், சலீம் மாலிக்கை விட நான் ஜூனியர் என்பதால், அவருக்கு என்னை மசாஜ் செய்துவிடக் கூறினார். மேலும் அவரின் ஷூ மற்றும் துணிகளை என்னை சுத்தம் செய்துக்கொடுக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தது பரபரப்பை கிளப்பியது.

 அடுத்த பூகம்பம்

அடுத்த பூகம்பம்

இந்நிலையில் ரமீஷ் ராஜா மீது வைத்த குற்றச்சாட்டு புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளது. அதில், "1992ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்றது. அப்போட்டியில் ஸ்லிப் பகுதியில் நிற்பதற்கே ரமீஷ் ராஜா அதிகாரங்களை பயன்படுத்தினார். ரமீஷ் ராஜா பிடித்த கேட்ச்களை விட விட்ட கேட்ச்கள் தான் அதிகம். ஆனால் அவர் தான் ஸ்லிப்பில் நிற்பார். இதற்கு காரணம் அதிகாரம்.

 என்ன அதிகாரம்

என்ன அதிகாரம்

ரமீஷ் ராஜாவின் தந்தை பாகிஸ்தானில் போலீஸ் கமிஷ்னராக பணியாற்றி வந்ததால் அணிக்குள்ளும் அவருக்கு தனி மரியாதைகள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக என்னைப் போன்ற வீரர்கள் பாதிக்கப்பட்டனர். கேட்ச்-பிடிப்பதற்கு சரியான ஃபார்மில் இல்லாத வீரர்கள் கூட, பெரிய பொறுப்புகளில் இருந்தது மோசமான நாட்கள் என வசீம் அக்ரம் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 நடவடிக்கை எடுக்கப்படுமா?

நடவடிக்கை எடுக்கப்படுமா?

ரமீஷ் ராஜா தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரின் மீது இது போன்று குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இதில் நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். வசீம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதே போல 356 ஒருநாள் போட்டிகளில் ஆடி 502 விக்கெட்களை எடுத்துள்ளார் என்பதால் அவருக்கும் பெரும் அளவில் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
EX Pakistan pacer wasim akram's allegation about ramiz raja creates controversy in pakistan cricket
Story first published: Tuesday, November 29, 2022, 13:53 [IST]
Other articles published on Nov 29, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X