பும்ராவை “ஆஹா ஓஹோ” என புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்.. அப்படி என்ன சொன்னார்?

பும்ராவை புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்- வீடியோ

டெல்லி : இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம்.

வாசிம் அக்ரம் கிரிக்கெட் உலகின் சிறந்த ஸ்விங் பந்துவீச்சாளராக அறியப்பட்ட ஜாம்பவான். அவர் தற்போது முன்னணி வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் பும்ரா குறித்த தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

பும்ரா கலக்கல்

பும்ரா கலக்கல்

பும்ரா சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். விக்கெட்களை அள்ளிய பும்ராவின் பந்துவீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். பும்ரா யார்க்கர் பந்துகள் வீசுவதில் சிறந்து விளங்குவதே அவரது சிறப்பான பந்துவீச்சுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

சிறந்த யார்க்கர்

சிறந்த யார்க்கர்

முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் இது குறித்து கூறுகையில், "தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மிக சிறப்பான, பலன் தரக்கூடிய யார்க்கர் வீசும் வேகப் பந்துவீச்சாளர்" என தெரிவித்தார்.

ஸ்விங் செய்கிறார்

ஸ்விங் செய்கிறார்

பும்ராவின் வித்தியாசமான பந்துவீச்சு முறை குறித்து பேசிய அக்ரம், பும்ராவின் பந்துவீச்சு மற்ற வேகப் பந்துவீச்சாளர்களிடம் இருந்து வித்தியாசமாக உள்ளது. குறைந்த தூரம் ஓடி வந்தாலும் பும்ரா பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவராக இருக்கிறார் என குறிப்பிட்டார்.

டெஸ்டில் யார்க்கர்

டெஸ்டில் யார்க்கர்

மேலும், பும்ரா தொடர்ந்து யார்க்கர் வீசுவதை குறிப்பிட்ட அக்ரம், பும்ரா ஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் யார்க்கர் வீசுவதை குறிப்பிட்டு, முன்பு தானும், வக்கார் யூனிஸும் டெஸ்ட் போட்டிகளில் யார்க்கர் வீசியதை குறிப்பிட்டார்.

இந்தியாவின் துருப்புச்சீட்டு

இந்தியாவின் துருப்புச்சீட்டு

2019 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் துருப்புச்சீட்டு பும்ரா தான் என பல கிரிக்கெட் விமர்சகர்களும் தெரிவித்துள்ள நிலையில், இந்தியா அவரை அதிக பணிச்சுமை அளிக்காமல் பாதுகாத்து வருகிறது. கடந்த வாரம் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரிலும், அடுத்து நடக்கவுள்ள நியூசிலாந்து தொடரிலும் பும்ராவிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Wasim Akram says Bumrah has the most effective Yorker
Story first published: Monday, January 21, 2019, 16:25 [IST]
Other articles published on Jan 21, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X