For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உம்ரான் மாலிக்கிற்கு அது சரிப்பட்டு வராது.. சாஹலை தூக்குங்க.. இந்திய அணிக்கு வசீம் ஜாபர் அறிவுரை

மும்பை : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சார்பாக அறிமுகமான உம்ரான் மாலிக் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

306 ரன்கள் என்ற இலக்கை எட்டிய இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது .

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

என்னங்க சொல்றீங்க.. ஆபத்திலும் தீபக் சஹார் வரமாட்டாரா??.. அப்படி என்னதான் ஆனது.. உண்மை இதோ! என்னங்க சொல்றீங்க.. ஆபத்திலும் தீபக் சஹார் வரமாட்டாரா??.. அப்படி என்னதான் ஆனது.. உண்மை இதோ!

கவனம் செலுத்துங்கள்

கவனம் செலுத்துங்கள்

இது குறித்து பேசிய வசீம் ஜாபர், இந்திய பந்துவீச்சாளர்கள் லயன் மற்றும் லெங்க்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.டாம் லாத்தம் போன்ற திறமையான வீரர்களை விரைவில் ஆட்டம் இழக்க செய்யுங்கள். நியூசிலாந்தில் அவர் ஒரு முக்கியமான வீரராக திகழ்கிறார் .நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால் நீங்கள் அவர்களது விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும்.

சரிப்பட்டு வரமாட்டார்

சரிப்பட்டு வரமாட்டார்

உம்ரான் மாலிக் போன்ற வேகப்பந்துவீச்சாளர் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவர் டி20 கிரிக்கெட்டை விட ஒரு நாள் போட்டியில் தான் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன். காரணம் டி20 கிரிக்கெட்டில் நிறைய வித்தியாசமான பந்துகளை வீச வேண்டும். அது அவருக்கு கிடையாது. மாறாக ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே லைனில் சரியாக தொடர்ந்து வீச வேண்டும் .

வாய்ப்பு கொடுங்கள்

வாய்ப்பு கொடுங்கள்

இதனை உம்ரான் மாலிக் நன்றாக செய்தார். இதேபோன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் சாகலுக்கு ஓய்வு வழங்கிவிட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும். குல்திப் யாதவ் நுணுக்கங்களாக பந்து வீசுவார். அதனை எதிர்கொள்ள நியூசிலாந்து வீரர்கள் தடுமாறுவார்கள். இதனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுங்கள் என்று அவர் கூறினார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சாஹல் 10 ஓவர் வீசி 67 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதில், விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆனால் வாஷிங்டன் சுந்தர் 10 ஓவர்கள் வீசி 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். சாஹல் அனுபவம் நிறைந்த வீரராக இருந்தாலும் சிறிய மைதானத்தில் நியூசிலாந்தை கட்டுப்படுத்த தவறியதால் வசீம் ஜாபர் இந்த ஐடியாவை கூறியிருக்கிறார்.

Story first published: Saturday, November 26, 2022, 17:34 [IST]
Other articles published on Nov 26, 2022
English summary
Wasim jaffer asks india to concentrate on line and length in nz series உம்ரான் மாலிக்கிற்கு அது சரிப்பட்டு வராது.. சாஹலை தூக்குங்க.. இந்திய அணிக்கு வசீம் ஜாபர் அறிவுரை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X