For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“ஓ.. இதுதான் கர்மா ஒரு பூமராங்க் என்பதா”.. வாகனை வறுத்தெடுத்த வசீம் ஜாஃபர்.. 2 வருட பகைக்கு முடிவு

செஞ்சூரியன்: "கர்மா பழிதீர்க்கும்" என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனை ஒரே ட்வீட்டால் நக்கலடித்துள்ளார் வசீம் ஜாஃபர்.

இந்திய முன்னாள் வீரர் வசீம் ஜாஃபருக்கும் - இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனுக்கும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வார்த்தை போர் வெடிப்பது வழக்கம்.

இந்திய அணியின் ஆட்டத்தை அடிக்கடி வாகன் மோசமாக விமர்சிப்பதால், அவருக்கு வசீம் தொடர்ந்து பதிலடித்து கொடுத்துக்கொண்டே இருப்பார்.

என்னதான் பிரச்சினை

என்னதான் பிரச்சினை

அந்தவகையில் இன்று ரசிகர்களை கவரும் வகையில் ஒற்றை ட்வீட்டால் வாகனின் மூக்கை உடைத்துள்ளார் வசீம் ஜாஃபர். கடந்த 2019ம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்றது. அதில் 4வது போட்டியின் போது 96 ரன்களுக்கெல்லாம் இந்திய அணி ஆல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தது.

மைக்கேல் வாகன் ட்வீட்

மைக்கேல் வாகன் ட்வீட்

இதனை ட்விட்டரில் விமர்சித்திருந்த வாகன், இந்த காலத்திலும் ஒரு அணி 100 ரன்களுக்கும் குறைவாக ஆல் அவுட்டாவதை நம்ப முடியவில்லை என இந்திய அணியை விமர்சனம் செய்தார். இந்த பதிவு அப்போது விராட் கோலி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.மேலும் அதனை பார்த்த இந்திய ரசிகர்கள் சிலரே இந்திய அணிக்கு எதிராக மோசமான விமர்சனங்களை சமூக வலைதளங்களில் முன்வைத்து வந்தனர்.

ஜாஃபரின் பதிலடி

ஜாஃபரின் பதிலடி

இந்நிலையில் 2019ல் போட்ட அந்த ட்வீட்டிற்கு 2021ல் பதிலடி கொடுத்துள்ளார் வசீம் ஜாஃபர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அதுவும் சமீபத்தில் நடந்து முடிந்த 3வது டெஸ்டில் 68 ரன்களுக்கெல்லாம் இங்கிலாந்து அணி மோசமாக ஆல் அவுட்டானது. நட்சத்திர வீரர்களால் கூட அந்த அணியை காப்பாற்ற முடியவில்லை.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

இங்கிலாந்தின் இந்த ஸ்கோரை செல்போனில் பார்ப்பது போல் வீடியோ வெளியிட்டுள்ள வசீம் ஜாஃபர், மைக்கேல் வாகனின் பழைய ட்வீட்டை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். இதற்கு வாகனும் "சிறந்த பதிவு வசீம்" என சைலண்டாக பதில் கொடுத்து தப்பித்துள்ளார். இந்த ட்வீட்டை தற்போது இந்திய அணி ரசிகர்கள் கர்மா பழித்தீர்க்கும் என விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, December 28, 2021, 22:08 [IST]
Other articles published on Dec 28, 2021
English summary
Wasim Jaffer dig outs england former captain Vaughan, for his old 'India 92 all out' tweet after England collapsed for 68 in Ashes
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X