For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!

மும்பை: விராட் கோலி என்னதான் கம்பேக் கொடுத்திருந்தாலும் ஒரு விஷயத்தில் மிகவும் திணறி வருவதாகவும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அது மிகவும் ஆபத்தானது எனவும் வசீம் ஜாஃபர் எச்சரித்துள்ளார்.

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்ட சூழலில் கடைசி போட்டி நாளை இந்தூரில் நடைபெறவுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தொடரில் ரோகித் சர்மா, சுப்மன் கில், முகமது சிராஜ் என பல வீரர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் நட்சத்திர வீரரான விராட் கோலி மட்டும் ஜொலிக்க தவறியுள்ளார்.

ஐசிசி-ன் உச்சகட்ட விருதுகள்.. 3 இந்திய வீரர்கள் கவுரவிப்பு.. விராட் கோலியின் மாஸ் கம்பேக் - விவரம்! ஐசிசி-ன் உச்சகட்ட விருதுகள்.. 3 இந்திய வீரர்கள் கவுரவிப்பு.. விராட் கோலியின் மாஸ் கம்பேக் - விவரம்!

தொடர் சொதப்பல்

தொடர் சொதப்பல்

கடந்த இலங்கை தொடரில் சதம் அடித்திருந்த அவர், தனது ஃபார்மை நியூசிலாந்தில் காட்டவில்லை. முதல் போட்டியில் 10 பந்துகளை சந்தித்து 8 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். 2வது போட்டியில் 109 என்ற எளிய இலக்கை விரட்டிய போதும், 9 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டு முறையுமே மிட்செல் சாண்ட்னரிடம் தான் அவுட்டானார்.

ஜாஃபர் எச்சரிக்கை

ஜாஃபர் எச்சரிக்கை

இந்நிலையில் கோலிக்கு முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், நியூசிலாந்து தொடரில் விக்கெட்டான முறையை கண்டு கோலி நிச்சயம் வருத்தத்தில் இருப்பார். லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக நீண்ட நாட்களாக அவர் தடுமாறி வருகிறார். இங்கிலாந்தில் அடில் ரஷித், ஆஸ்திரேலியாவில் ஆடம் சாம்பாவிடம் வீழ்ந்தார். தற்போது மிட்செல் சாண்ட்னருக்கு எதிராக தடுமாறுகிறார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட்

ஆஸ்திரேலிய டெஸ்ட்

3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி கம்பேக் தந்தே தீர வேண்டும். அதனை பெரிய போட்டிக்கான அடித்தளமாக தான் அவர் பார்க்க வேண்டும். ஏனென்றால் அடுத்ததாக வரவுள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நாதன் லைன் என்ற ஸ்பின்னர் இருக்கிறார். அவருக்கு எதிராகவும் அவர் தயங்கலாம். எனவே அவர் அதற்காக தயாராக வேண்டும் என ஜாஃபர் கூறியுள்ளார்.

ஐசிசியின் விருது

ஐசிசியின் விருது

இது ஒருபுறம் இருக்க 2022ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணியில் விராட் கோலிக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 3 வருடங்களாக ஃபார்ம் அவுட்டால் தவித்து வந்த விராட் கோலி ஆசிய கோப்பையில் 276 ரன்களை அடித்து 2வது அதிகபட்ச ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின்னர் டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களை ( 296 ரன்கள் ) அடித்த வீரர் எனவும் பெருமை பெற்றார்.

Story first published: Monday, January 23, 2023, 19:18 [IST]
Other articles published on Jan 23, 2023
English summary
Former Indian cricketer wasim jaffer gives warning to virat kohli ahead of India vs new zealand 3rd ODI match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X