For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எச்சிலுக்குத் தடை விதித்தால் எப்படி.. ரொம்பக் கஷ்டம்தான்.. வாசிம் ஜாபர் ஏமாற்றம்

மும்பை: வேகப் பந்து வீச்சாளர்கள், பந்தை எச்சில் தொட்டு ஷைன் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால் பந்து வீச்சாளர்களின் நிலை ரொம்ப கஷ்டமாகி விடும் என்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஐசிசி ஏதேனும் முடிவெடுத்தால் நிச்சயம் வேகப் பந்து வீச்சாளர்கள் பாதிக்கப்படுவர். ஸ்விங் பவுலிங்கையே நாம் மறக்க வேண்டி வரும் என்றும் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக பந்தில் எச்சில் தொட்டு ஷைன் செய்வதற்கு தடை விதிக்குமாறு கும்ப்ளே தலைமையிலான ஐசிசி குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்கு பெரும்பாலான பந்து வீச்சாளர்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. எச்சிலுக்குத் தடை விதித்தால் கஷ்டம் என்று பலரும் கூறி வருகின்றனர். மாற்று வழியை யோசிங்க என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில் வாசிம் ஜாபரும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

சச்சின் ரசிகர்கள் செய்த காரியம்.. உயிர் பயத்தில் தவித்த அம்பயர்.. ஷாக் சம்பவம்! சச்சின் ரசிகர்கள் செய்த காரியம்.. உயிர் பயத்தில் தவித்த அம்பயர்.. ஷாக் சம்பவம்!

சுவாரஸ்யம் போய்ருமே

சுவாரஸ்யம் போய்ருமே

இதுகுறித்து அவர் ஒரு இன்ஸ்டாகிராம் சாட்டின்போது பேசுகையில், எச்சில் தொடாமல் பந்தை ஷைன் செய்வதற்கான வழி நிச்சயம் தேவை. காரணம் எச்சிலுக்குத் தடை விதிக்கப்பட்டால் பந்து விச்சாளர்கள் நிலைமை மோசமாகி விடும். பேட்ஸ்மேன்களுக்கு வேலை எளிதாகி விடும். போட்டியில் சுவாரஸ்யம் குறைந்து விடும். விக்கெட்கள் விழாது என்று தெரிவித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்குப் பாதகம்

பந்து வீச்சாளர்களுக்குப் பாதகம்

பந்து வீச்சாளர்களுக்குப் பாதகமாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் போட்டி மாறினால் அது ஒன் சைட் மேட்ச் ஆகி விடும். பிறகு அதை செய்ய மாற்று வழியை தேட நேரிடும். எனவே இதற்கு முற்றுப் புள்ளி வைக்க எச்சிலுக்கு மாற்று வழியைத் தேடுவது நல்லது. டெஸ்ட் போட்டிகளில் 2 புதிய பந்துகளைப் பயன்படுத்தலாம். மேலும் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன் இருவருக்கும் சாதகமான பிட்ச்சுகளை தயார் செய்யலாம் என்றும் கூறியுள்ளார்.

கணிக்க முடியாது

கணிக்க முடியாது

விதிமுறைகளை எப்போதும் மனதில் வைத்துக் கொண்டு விளையாடுவது வீரர்களுக்கு பெரும் அயர்ச்சியையே தரும். குறிப்பாக போட்டி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும்போது விதிமுறைகள் மீது மனது செல்லாது. கொரோனா இப்போது பீக்கில் போய்க் கொண்டிருக்கிறது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாத நிலையே நிலவுகிறது என்றார் அவர்.

சிந்திக்கணும்

சிந்திக்கணும்

கிரிக்கெட் என்பது வெறும் உடல் ரீதியான போட்டி மட்டுமல்ல. நிறைய யோசிக்க வேண்டியிருக்கும். பேச வேண்டியிருக்கும். திட்டமிட வேண்டியிருக்கும். எனவே பலவற்றையும் மனதில் கொண்டுதான் எதையும் செய்ய வேண்டி வரும் என்றார் வாசிம் ஜாபர். ஜாபர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். மும்பை அணிக்காக விளையாடியுள்ள அவர் 2 முறை மும்பைக்கு ரஞ்சிக் கோப்பைகளை வாங்கிக் கொடுத்தவர் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Monday, June 8, 2020, 16:23 [IST]
Other articles published on Jun 8, 2020
English summary
Former Mumbai captain Wasim Jaffer has said that saliva ban will harm the bowlers
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X