For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அயர்லாந்து தொடருக்கு இப்படி தான் அணி வேண்டும்.. இன்றைய பிளேயிங் லெவனை வெளியிட்ட வாசிம் ஜாபர்

டுபிளின்: இந்தியா, அயர்லாந்து அணிக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.

டுபிளின் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டம் சும்மா பட்டாசு போல் தெறிக்கும்.

ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். விவிஎஸ் லட்சுமண் பேயிற்சியாளராக இந்த தொடருக்கு செயல்படுகிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டே அழிய போகிறது..ரமிஸ் ராஜா மீது பரபரப்பு குற்றச்சாட்டு..முன்னாள் வீரர் கருத்துபாகிஸ்தான் கிரிக்கெட்டே அழிய போகிறது..ரமிஸ் ராஜா மீது பரபரப்பு குற்றச்சாட்டு..முன்னாள் வீரர் கருத்து

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

இன்றைய போட்டி தொடர்பாக வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அயர்லாந்துக்கு எதிராக தாம் விரும்பும் அணி என்று பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளார். இதில் தொடக்க வீரராக இஷன் கிஷனையும், ருத்துராஜ் கெய்க்வாட்டையும் வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார். ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இந்த தொடர் தான் கடைசி வாய்ப்பாக இருக்கும்.

நடுவரிசை வீரர்கள்

நடுவரிசை வீரர்கள்

நடுவரிசையில் மூன்றாவது வீரராக சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ள வாசிம் ஜாபர், ஹர்திக் பாண்டியாவை 4வது வீரராக களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். 5வது வீரராக வாசிம் ஜாபர் தீபக் ஹூடாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார். சஞ்சு சாம்சன் அணியில் இருந்தும் ஹூடாவின் பெயரையே வாசிம் ஜாபர் முன்மொழிந்துள்ளார்.

பந்துவீச்சு பிரிவு

பந்துவீச்சு பிரிவு

அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக்கை 6வது வீரராக தேர்வு செய்துள்ளார் வாசிம் ஜாபர். ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேனான அக்சர் பட்டேல் 7வது வீரராகவும், ஹர்சல் பட்டேலை 8வது வீரராகவும் வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ளார். 9வது வீரராக சாஹ்ல், 10வது வீரராக ஆவேஷ் கான் மற்றும் 11வது வீரராக ஆர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு தருவேன் என்று கூறியுள்ள வாசிம் ஜாபர் , புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வாசிம் ஜாபர் லெவன்

வாசிம் ஜாபர் லெவன்

1.இஷான் கிஷன். 2, ருத்துராஜ் கெய்க்வாட், 3. சூர்யகுமார், 4.தீபக் ஹூடா, , 5,ஹர்திக் பாண்டியா, 6.தினேஷ் கார்த்திக், 7.அக்சர் பட்டேல், 8. ஹர்சல் பட்டேல், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, ஆவேஷ் கான் / உம்ரான் மாலிக், 11.சாஹல்

நேரம்- இரவு 9 மணி

சேனல்- சோனி டென் 1, சோனி சிக்ஸ்

Story first published: Sunday, June 26, 2022, 20:24 [IST]
Other articles published on Jun 26, 2022
English summary
Wasim jaffer reveals his playing xi for Ireland match அயர்லாந்து தொடருக்கு இப்படி தான் அணி வேண்டும்.. இன்றைய பிளேயிங் லெவனை வெளியிட்ட வாசிம் ஜாபர்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X