For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அராத்து பசங்க சார் நம்ம ஆளுங்க..!! மும்பை டெஸ்ட்டில் சேட்டை செய்த கோலி

மும்பை: இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி யாரும் எதிர்பாராத காரணத்தால் சிறிது நேரம் தடைப்பட்டது.

நியூசிலாந்த அணிக்கு இந்தியா 540 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து நியூசிலாந்து அணி கடைசி இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது. தற்போது அந்த அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

நியூசிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா.. !!நியூசிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா.. !!

தடைப்பட்டது

தடைப்பட்டது

இந்த நிலையில் கிரிக்கெட் போட்டிகளை 360 டிகிரி கோணத்தில் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஸ்பைடி கேமிரா, திடீரென்று கீழே இறங்கியது. இதனால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. அப்போது கேமிராக்கு முன் வந்த கேப்டன் கோலி, தனது வழக்கமான சேட்டையை செய்ய தொடங்கினார்.

சேட்டை

சேட்டை

ஏய்..! நீ ஏன் இங்க நிக்குற? மேல உன் இடத்துக்கு போ!! என்று ஹிந்தியில் விராட் கோலி கூறினார். உடனே அங்கு வந்த அஸ்வின் கேமிராவை மேலே தூக்கி விட உதவினார். ஆனால் அது பயனளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ், சிராஜ் ஆகியோர் ஸ்பைடி கேமிரா முன் சில சேட்டைகளை செய்தனர்.

வைரல்

வைரல்

இதனைத் தொடர்ந்து ஸ்பைடி கேமிரா மேலே கொண்டு செல்லப்பட்டது.இந்திய வீரர்கள் செய்த சேட்டைகளின்

வீடியோவும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் வெற்றி உறுதியாகி உள்ளதால் , வீரர்களும் கொஞ்சம் ஜாலியாக இருந்தனர். இருப்பினும் ஆட்டம் இன்னும் முடியவில்லை

தேவைதானா?

தேவைதானா?

இதனிடையே, ஸ்பைடி கேமிரா தேவை தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வீரர் அவுட்டா இல்லை நாட் அவுட்டா என்று பார்க்க ஸ்பைடி கேமிரா தேவைப்படவில்லை. வெறும் கெத்துக்காக வைக்கப்பட்டுள்ள கேமிராவால் ஆட்டத்துக்கு தான் பாதிப்பு என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.ஐ.பி.எல். பைனலில் ஜடேஜா கேட்ச் பிடித்த போது, அது ஸ்பைடி கேமிராவில் பட்டதால் அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, December 5, 2021, 23:51 [IST]
Other articles published on Dec 5, 2021
English summary
The 2nd Test between India and New Zealand was interrupted for a while due to unforeseen circumstances. The match was interrupted for a while by the Spidey camera, which suddenly went down. Captain Kohli, who was then in front of the camera, began to do his usual prank and this video goes viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X