For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.யை அலறவிட்ட டோணியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்! வைரல் வீடியோ

By Veera Kumar

கொல்கத்தா: ஆஸி.க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டால் உறுதுணையாக இருந்த டோணி, கொல்கத்தாவில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் தனது விக்கெட் கீப்பிங் திறமையால் போட்டியை மாற்றினார்.

உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் என்ற பெயருக்கு நேற்றைய போட்டியில் மீண்டும் இலக்கணம் கற்பித்துக் காட்டினார் டோணி.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பேட்டிங்கிற்கு சாதகமான கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதை ஆஸி. எளிதாக சேஸ் செய்துவிடும் என்றுதான் கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்தனர்.

ஆரம்பத்தில் அசத்தல்

ஆரம்பத்தில் அசத்தல்

ஆனால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாரின் ஸ்விங் பந்துக்கு பதில் சொல்ல முடியாமல் ஆரம்பத்திலேயே அடி வாங்கியது ஆஸ்திரேலியா. இருப்பினும் மேக்ஸ்வெல் வழக்கமான பாணியில் அதிரடியை தொடங்கியபோது இந்திய ரசிகர்கள் நம்பிக்கை குறையத் தொடங்கியது.

மேக்வெல் அதிரடி

மேக்வெல் அதிரடி

18 பந்துகளில் 14 ரன்களை எடுத்தார் மேக்ஸ்வெல். அதில் 2 சிக்சர்களும் அடங்கியிருந்தது. டேஞ்சராக காட்சியளித்தார் மேக்ஸ்வெல். அவரை அதிக நேரம் களத்தில் விட்டால் இந்தியாவின் வெற்றிவாய்ப்பை பறித்துவிடுவார் என்பது டோணிக்கும் தெரியும். எனவேதான், சஹல் அவருக்கு பந்து வீசியபோது, ஹிந்தியில், எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் என்பதை கூறி ஐடியா கொடுத்தபடி இருந்தார்.

டோணி கொடுத்த டிப்ஸ்

டோணி கொடுத்த டிப்ஸ்

டோணியின் ஐடியாப்படி பந்து வீசிய சஹலின் 9 பந்துகளில் 1 ரன் கூட எடுக்க முடியாமல் திணறினார் மேக்ஸ்வெல். 23வது ஓவரை சஹல் வீசியபோது பொறுமை இழந்த மேக்ஸ்வெல் பிட்சிலிருந்து இறங்கிவந்து அடிக்க முற்பட்டார். ஆனால் அந்த பந்து 'டர்ன்' ஆகியதால் பேட்டில் படவில்லை. மேக்ஸ்வெல்லின் உடலில் பட்ட அந்த பந்து லெக் திசையில் போனது.

மின்னல் வேக ஸ்டெம்பிங்

இருப்பினும் எளிதாக பிடிக்கமுடியாத அந்த பந்தை பிடித்த டோணி, மேக்ஸ்வெல் மீண்டும் பிட்சுக்குள் வருவதற்கு முன்பாகவே மின்னல் வேகத்தில் செயல்பட்டு ஸ்டெம்பிங் செய்தார். டோணியின் மின்னல் வேக ஸ்டெம்பிங்கால் மேக்ஸ்வெல் ஆட்டம் முடிவடைந்தது. ஆஸி. மொத்தமே வார்னர், மேக்ஸ்வெல், ஸ்மித் ஆகிய மூவரைத்தான் பேட்டிங்கில் பெரிதும் நம்பியிருந்தது. வார்னர் முதலிலேயே கிளம்பிவிட்டார். மேக்ஸ்வெல்லை கஷ்டமான ஸ்டெம்பிங் மூலம் வெளியே அனுப்பி இந்திய வெற்றியை சாத்தியமாக்கினார் டோணி.

கம்பீரம்

டோணி ஸ்டெம்பிங்கை சிஎஸ்கே அணி டிவிட்டரில் பாராட்டியுள்ளது. மகேந்திர லைட்னிங் டோணி என்று மின்னலோடு அவரை ஒப்பிட்டுள்ளது. கூலான டோணியும் கூட இந்த ரிஸ்கான ஸ்டெம்பிங்கை கொண்டாடும் விதத்தில் பந்தை மேலே எறிந்து கம்பீரம் காட்டினார். இந்த வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.

Story first published: Friday, September 22, 2017, 19:16 [IST]
Other articles published on Sep 22, 2017
English summary
A lightning-quick glovework from Mahendra Singh Dhoni's hands has almost become a routine. The 36-year-old wicketkeeper produces at least one brilliant glovework in every game he plays to catch the opposition batsman off guard.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X