For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சேப்பாக்கம் பிட்ச் நிலவரமே தெரியல… ஒரே குழப்பம்.. அதான் பவுலிங் பண்றோம்.. தல தோனியின் காரணம்

சென்னை: பிட்ச் நிலவரத்தை கணிக்க முடியாததால் பந்துவீச்சை தேர்வு செய்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி கூறியிருக்கிறார்.

சென்னை சேப்பாக்கத்தில் முதல் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கில் இறங்கியது.

சென்னை சூப்பர் கிங்சில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடுகின்றனர். இம்ரான் தாஹிர், வாட்சன், பிராவோ. ஆர்சிபி அணியில் டிவில்லியர்ஸ், மொயின் அலி, கொலின் டி கிராண்ட் ஹோம், ஷிம்ரன் ஹெட்மையர் ஆகிய 4 அயல்நாட்டு வீரர்கள் களமிறங்கியிருக்கின்றனர்.

டாஸ் வென்றும் பேட்டிங்கை தேர்வு செய்யாமல் ஏன் பீல்டிங்கை தேர்வு செய்தோம் என்று கேப்டன் தோனி விளக்கி இருக்கிறார். அவர் கூறியதாவது:

CSK vs RCB : ஆத்தாடி.. 2 டாப் வீரர்களை சாய்த்த ஹர்பஜன்.. 3 விக்கெட் எடுத்து அசத்தல்! CSK vs RCB : ஆத்தாடி.. 2 டாப் வீரர்களை சாய்த்த ஹர்பஜன்.. 3 விக்கெட் எடுத்து அசத்தல்!

மந்தமான பிட்ச்

இந்த மைதானத்தில் சில பிராக்டீஸ் கேம்களை ஆடினோம். பிட்ச் மந்தகதியாக இருக்கிறது. பிட்சை கணிக்கவே முடியவில்லை.

இலக்கு நிர்ணயிப்பது கடினம்

அதனால் முதலில் பேட் செய்தால் என்ன இலக்கு நிர்ணயிப்பது என்பதை தீர்மானிப்பது கடினம். அதனால் பந்துவீச்சை தேர்வு செய்தோம் என்றார்.

கோலி கூறுவது என்ன?

கோலி கூறுவது என்ன?

விராட் கோலி கூறியதாவது:கடந்த சில நாட்களாக நாங்களும் மைதானத்தின் தன்மையை கணித்து வருகிறோம். பிட்ச் மந்தமாக உள்ளது.

சென்னை அணி

சென்னை அணி

பேட்டிங் பரவாயில்லை. கடந்த முறை சென்னை அணி, 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றி பெற்றதை அறிவோம் என்றார்.

Story first published: Saturday, March 23, 2019, 21:49 [IST]
Other articles published on Mar 23, 2019
English summary
We are not sure about the wicket dhoni said after winning the toss.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X