For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"கரெக்ட்"டா போயிட்டிருக்கோம்... டோணி

மிர்பூர்: டுவென்டி 20 உலகக் கோப்பைத் தொடருக்கு நமது அணி மிகச் சரியான முறையில் தயாராகி வருகிறது. சரியான பாதையில் நாங்கள் போய்க் கொண்டுள்ளோம் என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.

டுவென்டி 20 போட்டிகளில் தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

உலகக் கோப்பை டுவென்டி 20 தொடருக்கு முன்பு இந்தியா தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருவதால் நிச்சயம் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தொடர் வெற்றிகள்

தொடர் வெற்றிகள்

முதலில் ஆஸ்திரேலியாவில் வைத்து ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்து டுவென்டி 20 தொடரை இந்தியா வென்றது. அடுத்து இந்தியாவுக்கு வந்த இலங்கையை 2-1 என்ற கணக்கில் துவைத்து எடுத்தது. தற்போது ஆசியாக் கோப்பையை வென்றுள்ளது.

ஒரு தோல்வி கூட இல்லை

ஒரு தோல்வி கூட இல்லை

ஆசியாக் கோப்பைத் தொடரில் இந்தியா தான் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் வங்கதேசம், அடுத்து பாகிஸ்தான், பின்னர் இலங்கை, அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கடைசியாக மீண்டும் வங்கதேசத்தை தூள் தூளாக்கி ஆசியாக் கோப்பையை வென்றுள்ளது இந்தியா.

சரியான பாதையில்

சரியான பாதையில்

இதுகுறித்து நேற்றைய போட்டிக்குப் பின்னர் கேப்டன் டோணி கூறுகையில், இப்போது நாங்கள் சரியான பாதையில் போய்க் கொண்டுள்ளோம். சரியான முறையில் உலகக் கோப்பைக்குத் தயாராகி வருகிறோம்.

டாப் ஆர்டர் டக்கர்!

டாப் ஆர்டர் டக்கர்!

நமது அணியின் டாப் ஆர்டர் அபாரமாக ஆடியது. மிகச் சிறப்பாக ஆடினர். கீழ் வரிசையில் உள்ளவர்கள், அவர்கள் செய்ததை வைத்துக் கொண்டு அப்படியே போட்டியை சிறப்பாக முடிக்கும் வேலையைச் சரியாகச் செய்தால் போதுமானது.

சரியான அணி

சரியான அணி

நமது அணி இப்போதுதான் சரியாக இருக்கிறது. நாம் உலகக் கோப்பையை வெல்லும் ஆயத்த நிலையில் மிகச் சரியாக இருக்கிறோம் என்றார் கேப்டன் டோணி.

பந்து வீச்சு அபாரம்

பந்து வீச்சு அபாரம்

நமது பந்து வீச்சும் பலமாகி விட்டது. இளம் ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்ட்யா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகிய இருவரும் சிறப்பாக பந்து வீசுகின்றனர். ஜஸ்ப்ரீத் யார்க்கர்களை அபாரமாக போடுகிறார். யார்க்கர் போடாத நேரத்தில் விதம் விதமான முயற்சிகளை அவர் பரீட்சித்துப் பார்க்கிறார்.

சரியான பேக்கேஜ்

சரியான பேக்கேஜ்

அதேபோல பாண்ட்யா அருமையாக பந்து வீசுவதோடு, நல்ல பேட்டிங்கையும் தருகிறார். எனவே அவர் ஒரு சரியான பேக்கேஜாக அணிக்குக் கிடைத்துள்ளார். பீல்டிங்கிலும் அவர் அசத்துகிறார்.

எல்லாமே மேட்ச் வின்னர்கள்

எல்லாமே மேட்ச் வின்னர்கள்

யுவராஜ் சிங்கையும் மறந்து விட முடியாது. மொத்தத்தில் நமது அணியில் கிட்டத்தட்ட 14 பேர் மேட்ச் வின்னர்களாக உள்ளனர். இது அரிய விஷயம், அருமையான விஷயமும் கூட. சரியான கலவையில் அணி உளளது என்றார் டோணி.

Story first published: Monday, March 7, 2016, 12:11 [IST]
Other articles published on Mar 7, 2016
English summary
As India lifted the Asia Cup trophy without losing a single match in the tournament, skipper MS Dhoni said they were well on track for the World Twenty20, beginning in two days time.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X