For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்... எங்ககையில எதுவும் இல்லை... மார்கன் நம்பிக்கை

துபாய்: நேற்றைய போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது.

இயைடுத்து ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது கேகேஆர் அணி.

இந்நிலையில் தங்களது கையில் எதுவும் இல்லை என்றும் பிளே-ஆப் சுற்றிற்கு முன்னேறுவது கடவுள் கையில்தான் உள்ளது என்றும் கேகேஆர் அணியின் கேப்டன் இயான் மார்கன் தெரிவித்துள்ளார்.

அவரால் பல பேருக்கு சிக்கல்.. தமிழக வீரரை காலி செய்த ரூத்துராஜ்.. குறி வைத்த சிஎஸ்கே.. என்ன நடந்தது?அவரால் பல பேருக்கு சிக்கல்.. தமிழக வீரரை காலி செய்த ரூத்துராஜ்.. குறி வைத்த சிஎஸ்கே.. என்ன நடந்தது?

தகர்ந்த பஞ்சாப் கனவு

தகர்ந்த பஞ்சாப் கனவு

பிளே ஆப் சுற்றிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி சென்றுள்ளது. நேற்றைய சிஎஸ்கே -பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டியில் சிஎஸ்கே வெற்றி மூலம் பஞ்சாப் அணியின் பிளே-ஆப் கனவு தகர்ந்துள்ளது. இதனிடையே, கேகேஆர் மற்றும் ஆர்ஆர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் கேகேஆர் வெற்றி பெற்றுள்ளது.

4வது இடத்தில் கேகேஆர்

4வது இடத்தில் கேகேஆர்

இதையடுத்து 14 புள்ளிகளுடன் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது கேகேஆர். ஆயினும் நெட் ரன்ரேட் குறைவாக உள்ளதால் அந்த அணியின் பிளே-ஆப் கனவு நனவாகுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களது கடமையை சரியாக செய்துள்ளதாகவும், இதை தொடர்ந்து பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடவுள் கையில் உள்ளதாக மார்கன் கூறியுள்ளார்.

கேகேஆர் பிளே-ஆப் கனவு

கேகேஆர் பிளே-ஆப் கனவு

இன்று நடைபெறவுள்ள டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையிலான போட்டியை சார்ந்தே கேகேஆர் அணியின் பிளே-ஆப் தகுதி இருக்கும். இதேபோல மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றாலும் கேகேஆர் பிளே-ஆப்பிற்கு தகுதி பெறும் வாய்ப்பு உள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு

ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு

இந்நிலையில் பிசிசிஐ சிறப்பான தொடரை அமைத்துக் கொடுத்துள்ளதாக நேற்றைய போட்டியில் தோல்வியுற்றுள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த தொடரின்மூலம் ரசிகர்களின் முகங்களில் புன்னகையை வரவழைக்க முடிந்ததாக தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, November 2, 2020, 11:47 [IST]
Other articles published on Nov 2, 2020
English summary
Royals' skipper Steve Smith thanked BCCI for arranging a fantastic tournament in tough times
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X