ஷாருக்கானையே வாங்கிட்டோ...ஷாருக்கானின் மகனை கிண்டல் செய்த ப்ரீத்தி சிந்தா... வைரல் வீடியோ

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஷாருக்கானை ஏலம் எடுத்த பின்பு நடிகர் ஷாருக்கானின் மகனை ப்ரீத்தி சிந்தா கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்றது. இதில் புதுமுக வீரர்களை எடுப்பதில் பல அணிகளும் ஆர்வம் காட்டி வந்தன.

அந்தவகையில் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

 கடும் போட்டி

கடும் போட்டி

ஷாருக்கானை ஏலம் எடுப்பதற்கு முதலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆர்வம் காட்டியது. இதனையடுத்து அவருக்கான ஏலத்தில் பெங்களூரு அணி சேர்ந்தது. இரு அணிகள் போட்டிப்போட்டு கொண்டு ஏலம் கேட்க ஏலம் 2 கோடியை தாண்டிச் சென்றது. இதனால் டெல்லி அணி பின்வாங்கியது.

ஏலம்

ஏலம்

டெல்லி பின் வாங்கிய பின்பு பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்.சி.பிக்கு போட்டியாக ஏலம் கேட்க தொடங்கியது. இரு அணிகளுக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் இறுதியில் பஞ்சாப் அணி ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. பெங்களூரு அணி 5 கோடியுடன் பின் வாங்கியது.

ஆர்யன்

ஆர்யன்

ஐபிஎல் ஏலத்தின் போது நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் வருகை தந்திருந்தார். அப்போது அவரை பார்த்த ப்ரீத்தி சிந்தா, நாங்கள் ஷாருக்கானை வாங்கிவிட்டோம் என கிண்டல் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

தமிழகத்தை சேர்ந்தவரான ஷாருக்கான், உள்நாட்டு தொடர்களில் இதுவரை 31 டி20 போட்டிகளில் விளையாடி 293 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டக் கோப்பையில் அவர் அதிரடி ஆட்டத்தால் 88 ரன்கள் எடுத்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
'We Got Shahrukh' Preity Zinta Teases Shah Rukh Khan's Son Aryan after got the TN young talent
Story first published: Saturday, February 20, 2021, 20:11 [IST]
Other articles published on Feb 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X