For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்க எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சாய்ச்சுடுவோம்… பக்கா பிளான் ரெடி.. சாஹலின் ஓபன் சவால்

லண்டன்: எந்த அணியில் எவ்வளவு பெரிய ஹிட்டர்கள் இருந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் பிளான் வைத்துள்ளதாக இந்திய அணியின் பவுலர் சாஹல் கூறியிருக்கிறார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிக சிறப்பு. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை தவிர. அந்த ஒரே ஒரு ஆட்டம், இந்திய அணியின் பல விஷயங்களை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்ற அம்சத்தை சொல்லி இருக்கிறது.

இதுவரை தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி 4 வெற்றிகளையும், நியூசி. உடன் மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது. இந்திய அணி அடுத்ததாக 27ம் தேதி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது.

தயாராக உள்ளது இந்தியா

தயாராக உள்ளது இந்தியா

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்திய அணியின் வீரரான சாஹல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: எந்த அணியாக இருந்தாலும் எதிர்த்து விளையாட இந்தியா தயார்.

சமாளிக்க முடியும்

சமாளிக்க முடியும்

எந்த அணியில் எவ்வளவு பெரிய ஹிட்டர்கள் இருந்தாலும் கவலையில்லை. அதனை சமாளிக்க முடியும். ஏனெனில் ஐபிஎல் போட்டிகள் என்பது வேறு உலக கோப்பை போட்டிகள் மற்றும் அதன் அதன் அழுத்தம் என்பது வேறு.

தனித்தனி பிளான்

தனித்தனி பிளான்

இங்குள்ள சூழ்நிலைகளை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ரசல் மாதிரியான எந்த அதிரடி வீரர்கள் இருந்தாலும் அவர்களுக்கு என தனித்தனியே பிளான்களை வைத்துள்ளோம். அதன்படி நாங்கள் களம் இறங்கி, ரன் குவிப்பை கட்டுப்படுத்துவோம்.

சாம்பியன் பட்டம்

சாம்பியன் பட்டம்

மற்ற அணிகளிடம் இருப்பது போல அல்லாமல் வேறுபட்ட பவுலிங் பிளான் எங்களிடம் இருக்கிறது. ஆதலால் எந்த அணியையும் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும். உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார்.

Story first published: Tuesday, June 25, 2019, 11:49 [IST]
Other articles published on Jun 25, 2019
English summary
We have a different plan for every team in upcoming matches says chahal.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X