For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் பிரச்னை.. அதனால தான் ராஞ்சி போட்டியில் தோற்றோம்… கேப்டன் கோலி சொல்லும் காரணம்

Recommended Video

வெற்றி தோல்வி பற்றி கேப்டன்கள் என்ன சொல்கிறார்கள்- வீடியோ

ராஞ்சி: பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டதே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 டி20, 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றவாது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடிது.

India vs Australia : கடைசி 2 ஒருநாள் போட்டி... தோனியை உட்கார வைத்த பிசிசிஐ... ரசிகர்கள் நறநற India vs Australia : கடைசி 2 ஒருநாள் போட்டி... தோனியை உட்கார வைத்த பிசிசிஐ... ரசிகர்கள் நறநற

313 ரன்கள் குவித்தது

313 ரன்கள் குவித்தது

கேப்டன் ஆரோன் பின்ச், கவாஜா ஆகியோரின் அருமையான தொடக்கம் அந்த அணி 313 ரன்களை குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை குவித்தார்.

தொடக்கத்தில் சரிவு

தொடக்கத்தில் சரிவு

இதனையடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சிகர் தவான் 1, ரோகித் ஷர்மா 14 ரன்களில் வெளியேற கேப்டன் கோலி நிதானமாக விளயாடி 123 ரன்கள் குவித்தார்.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

எனினும் இவரைத்தொடர்ந்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற ஆட்டத்தின் 48.2-வது பந்தில் இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்து தவித்தது. 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இந்த இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று போனது.

கோலியின் பேட்டி

கோலியின் பேட்டி

முன்னதாக இத்தொடரின் 2 போட்டிகளில் வெற்றிப்பெற்ற இந்தியா இன்றைய போட்டியில் தோல்வியடைந்த போதிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வருகிறது. தோல்வி குறித்து கேப்டன் கோலி கூறியதாவது:

சொதப்பினோம்

சொதப்பினோம்

முதல் இன்னிங்ஸின் முதல் பாதியில் நாங்கள் சொதப்பினோம். ஆனால் நாங்கள் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியும் மிக அற்புதமாக விளையாடியது.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

ஆஸ்திரேலிய அணி எப்படியும் 350 ரன்களை தாண்டிவிடும். கடினமாக இலக்கை நிர்ணயிக்கும் என்று தான் நினைத்தோம் ஆனால் அதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தியது மகிழ்ச்சி தான்.

இதுதான் வெற்றிக்கு காரணம்

இதுதான் வெற்றிக்கு காரணம்

ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர். அது தான் அவர்களின் வெற்றிக்கான காரணம்.

முழுபலத்துடன் வருவோம்

முழுபலத்துடன் வருவோம்

இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலிய அணி நிச்சயம் தகுதியானது தான். இந்த தொடர் முடிவடைய இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளது, நாங்கள் நிச்சயம் முழு பலத்துடன் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் என்று கூறினார்.

Story first published: Saturday, March 9, 2019, 11:24 [IST]
Other articles published on Mar 9, 2019
English summary
We have strung partnerships after losing two wickets says Indian skipper kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X