For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின், ஜடேஜாவை விட நல்லா விளையாடினோம்… டீமில் இடம் கிடைச்சது… சொல்றது யாருன்னு பாருங்க

Recommended Video

நல்லா விளையாடினோம் அணியில் இடம் கிடைத்தது: குலதீப் யாதவ்- வீடியோ

டெல்லி:அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு நாங்கள் காரணமல்ல, எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று இந்திய அணியின் ஸ்பின்னரான குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் தற்போது பிரதான சுழற்பந்து வீச்சாளர்களாக யுவேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் வலம் வருகின்றனர். ரிஸ்ட் ஸ்பின்னர்களான இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்திய அணி நிர்வாகம் ரிஸ்ட்ஸ்பின் மீது முழு நம்பிக்கையை கொண்டுள்ளது.

ஒருபடி மேலே சொல்ல வேண்டும் என்றால்... வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் குல்தீப் யாதவ் தான் பிரதான பந்துவீச்சாளர் என்று ரவி சாஸ்திரியே கூறியிருந்தார். அதனால் விரல்களை பயன்படுத்தி பந்து வீசும் அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது.

 </a></strong><a class=கோலி விக்கெட்டை கைப்பற்ற ஐடியா கொடுத்த முன்னாள் இந்திய வீரர்..! ஆடம் சம்பா ஓபன் டாக் " title=" கோலி விக்கெட்டை கைப்பற்ற ஐடியா கொடுத்த முன்னாள் இந்திய வீரர்..! ஆடம் சம்பா ஓபன் டாக் " /> கோலி விக்கெட்டை கைப்பற்ற ஐடியா கொடுத்த முன்னாள் இந்திய வீரர்..! ஆடம் சம்பா ஓபன் டாக்

காயத்தால் பாண்டியா அவதி

காயத்தால் பாண்டியா அவதி

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கூட கடைசி நேரத்தில் காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அவதிப்பட்டார். அதனால் தான் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

குல்தீப் திட்டவட்டமாக மறுப்பு

குல்தீப் திட்டவட்டமாக மறுப்பு

இந்நிலையில் குல்தீவ் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹலுக்கு அணி நிர்வாகம் மறைமுக சப்போர்ட் செய்வதால் அஸ்வின், ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று தகவல்கள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டை குல்தீப் யாதவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

வாய்ப்பு கிடைத்தது

வாய்ப்பு கிடைத்தது

அவர் கூறியதாவது: அஸ்வின், ஜடேஜா என யாரையும் நாங்கள் வெளியேற்றவில்லை. அணியில் இடம் பெற்ற எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள். நாங்கள் சரியாக பயன்படுத்தி கொண்டோம்.

அணியின் வெற்றி

அணியின் வெற்றி

பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றியில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு எப்போதுமே பங்கு உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் இருவரும் விளையாடி வருகின்றனர்.

உத்திகளை கற்றுள்ளோம்

உத்திகளை கற்றுள்ளோம்

ஆட்டத்தின் நுணுக்கங்களை நாங்கள் அவர்களிடம் இருந்துதான் கற்றுள்ளோம். டெஸ்ட் போட்டியின் போது இருவரிடமும் இருந்து நிறைய உத்திகளை கற்றுக் கொண்டிருக்கிறேன்.

சிறப்பாக விளையாடுகிறோம்

சிறப்பாக விளையாடுகிறோம்

நானும், யுவேந்திர சாஹலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துகிறோம். அதில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறோம். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விளையாடும் திறன்

விளையாடும் திறன்

ஆஸ்திரேலிய வீரர்களில் ஷான் மார்ஷ், சுழற்பந்து வீச்சை நன்றாக எதிர் கொண்டு விளையாடும் திறன் பெற்றவர். ஆஸ்திரேலிய மண்ணில் எனது பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டு விளையாடினார்.

மார்ஷ் எப்படி ஆடுகிறார்

மார்ஷ் எப்படி ஆடுகிறார்

அதன் எதிரொலியாக... சில ஆட்டங்களில் எனக்கு வாய்ப்பு இல்லாமல் ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மார்ஷ் எப்படி ஆடுகிறார் என்பது குறித்து ஆய்வு செய்தேன்.

சுழற்பந்தில் விளையாடினார்

சுழற்பந்தில் விளையாடினார்

அதில் சுழற்பந்து வீச்சின் போது தமது முன்னங்காலை நகர்த்தி அவர் விளையாடுவதை கண்டுபிடித்தேன். ஆனால்... இனி வரக்கூடிய போட்டிகளில் அவர் தமது ஆட்ட நுணுக்கத்தை மாற்ற ஏதேனும் உத்திகளை வைத்திருக்கிறரா என்று தெரியவில்லை. அதற்கேற்ப நானும் என்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று குல்தீப் யாதவ் கூறினார்.

Story first published: Tuesday, March 5, 2019, 12:00 [IST]
Other articles published on Mar 5, 2019
English summary
Haven’t ousted anyone, we have just made use of our opportunities says Kuldeep yadav.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X