For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருக்கு வரும் இந்த மனசு.. எல்லா புகழும் ராஜஸ்தானுக்கே… இதுதான் நம்ம தல

ஜெய்பூர்: ராஜஸ்தான் அணிக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும் என்று சென்னை அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.

பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்தார். நோ பாலாக வீசப்பட்ட 2வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது.

நோ பால் இல்லை

நோ பால் இல்லை

ப்ரீஹிட் பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். 3வது பந்தில் தோனி போல்டாகி அதிர்ச்சி அளித்தார். 4வது பந்தில் சாண்ட்னெர் 2 ரன்கள் எடுத்தார். அந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டு பிறகு, இல்லை என கூறப்பட்டது.

சிக்சரால் வெற்றி

சிக்சரால் வெற்றி

5வது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. வொய்ட் மூலம் ஒரு ரன் கிடைக்க, சிஎஸ்கே வெற்றிக்கு ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் சாண்ட்னெர் சிக்சர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.

ராஜஸ்தானுக்கு கிரெடிட்

ராஜஸ்தானுக்கு கிரெடிட்

இந்த போட்டி குறித்து கேப்டன் தோனி கூறியதாவது: இது அருமையான ஒரு போட்டி. ராஜஸ்தான் அணிக்கு கிரெடிட் கொடுக்க வேண்டும். ஆடுகளத்திற்கு தேவையான ரன்னை விட சற்று குறைவாக அடித்துவிட்டார்கள்.

நிறைய விஷயங்கள்

நிறைய விஷயங்கள்

இதுபோன்ற போட்டிகளில் கிடைக்கும் வெற்றிகள் மூலம் நிறைய விஷயங்களை கற்று கொள்ளலாம். வெற்றியை கொண்டாடும் அதே நேரத்தில் நமது தவறுகள் என்ன என்பதையும் கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.

குறை கூற முடியாது

குறை கூற முடியாது

எங்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து கட்டுப்படுத்தினார்கள். கடைசிவரை நெருக்கடியிலேயே வைத்திருந்தார்கள். போட்டியில் தோற்றால் ஒரு தனிப்பட்ட வீரரை குறை சொல்ல முடியாது. ஒட்டுமொத்த அணியும்தான் பொறுப்பேற்க வேண்டும். அதனால் தனிப்பட்ட வீரர் மீது பழிபோட முடியாது.

தவறுகள் என்ன?

தவறுகள் என்ன?

இது போன்ற போட்டிகளில் கிடைக்கும் வெற்றிகள் மூலம் நிறைய விஷயங்களை கற்று கொள்ளலாம். வெற்றியை கொண்டாடும் அதே நேரத்தில் நமது தவறுகள் என்ன என்பதையும் கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.

Story first published: Friday, April 12, 2019, 20:49 [IST]
Other articles published on Apr 12, 2019
English summary
Dhoni credited Rajasthan Royals for taking the contest till the final delivery despite posting a modest total.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X