For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டாசில் தோத்துட்டோம்.. ஆனாலும் சேசிங் தான் எங்களுக்கு பிடிக்கும்.. களத்தில் கெத்து காட்டிய கோலி...!!

எக்பாஸ்டன்: டாசில் வென்றால் பேட்டிங் செய்வதாக தான் நினைத்திருந்தேன், பரவாயில்லை.. எங்களுக்கு சேசிங் ரொம்ப பிடிக்கும் என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, இங்கிலாந்து போட்டி தொடங்கியிருக்கிறது. டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ஒருவழியாக (அப்பாடா..!!) விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அவரது இடத்தில் இளம் வீரர் ரிஷப் பன்ட் களமிறங்கி உள்ளார். இது தவிர மற்ற வீரர்கள் அனைவரும் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் தான்.

மாற்றங்கள் இரண்டு

மாற்றங்கள் இரண்டு

இதே போல் இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியும் 2 மாற்றத்துடன் களமிறங்குகிறது. மொயின் அலிக்கு பதிலாக லியாம் ப்ளங்கட் அணியில் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத அதிரடி வீரர் ஜேசன் ராய் இன்றைய போட்டியில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து உள்ளார்.

பிரச்னை கிடையாது

பிரச்னை கிடையாது

டாசில் தோற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியிருப்பதாவது: டாசில் தோல்வி. அது ஒரு பிரச்னை கிடையாது. சேசிங்கை விரும்புகிறவர்கள் நாங்கள். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால்... டாசில் வென்றால் நாங்களும் முதலில் பேட் செய்ய தான் தீர்மானித்திருந்தோம்.

வெற்றி தான் நோக்கம்

வெற்றி தான் நோக்கம்

இந்த தொடரில், முதல் போட்டியை தவிர எந்த ஆட்டத்திலும் நாங்கள் சேசிங் செய்ய வில்லை. ஆகவே, இந்த போட்டி சவால் நிறைந்தது.எதிரணி யார் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆட்டத்தில் வெற்றி பெறுவது ஒன்று தான் எங்களின் நோக்கம்.

ரிஷப் பன்ட் சேர்ப்பு

ரிஷப் பன்ட் சேர்ப்பு

இந்த போட்டியில் விஜய் சங்கர் இல்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் என்ன செய்வார் என்பது எல்லோரும் பார்க்க இருக்கிறோம். பயமில்லாதவர், துணிந்து ஆடக்கூடியவர் ரிஷப் பன்ட். பாகிஸ்தானும் ஆதரவு தெரிவிக்கிறது. நிச்சயம் வெல்வோம் என்றார்.

Story first published: Sunday, June 30, 2019, 16:01 [IST]
Other articles published on Jun 30, 2019
English summary
We love chasing says kohli after losing toss against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X